உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

589


ரோமாபுரிப் பாண்டியன் 589 பாண்டிய வேந்தன் அருகிலேயே இருந்து பரிவோடு கவனித்துக் கொண்டனர், அவனுக்கு ஆகவேண்டியவற்றை. பிணியின் கொடுமை ஒருபுறம் இருந்திடப் பொறாமை மிக்க தளபதியும், பொறுப்பே இல்லாத இளவரசனும் தனக்குப் பின்னால் இந்த நாட்டினை எந்தத் திக்கினில் இட்டுச் செல்வரோ என்னும் பெருங்கவலையே பெருவழுதிப் பாண்டியனைப் பெரிதும் வாட்டிற்று; வதைத்திட்டது! அவன் முத்துநகையையும், புலவர் காரிக்கண்ணனாரையும் தனக்கு மிக அருகாக அழைத்து, அவர்களுடைய செவிகளில் மட்டுமே விழுந்திடுமாறு தன் எண்ணங்கள் சிலவற்றைத் திணறித் திணறியே வெளிப்படுத்தினான்; புலவர் அவர்களே! சாவின் சிறகுகள் விரைவில் என்னைத் தழுவிக் கொள்ளும் என்பதை என்னால் நன்றாக உணர முடிகிறது. மரண மண்டலத்தின் பயங்கரமான ஓலம் ஒன்று, என் காதிலே இரைச்சலை எழுப்புவதையும் என்னால் தெளிவாகக் கேட்கமுடிகிறது. கொந்தளிப் பிலே கடல் குமுறுவதைப்போல் - புயல் வீச்சிலே மரங்கள் பொருமு வதைப்போல் - என் இதயக்குலை அதிர்ந்து நடுங்குவதை உங்களுக்கு எப்படித்தான் எடுத்துரைத்திடுவேன்?... ஆனால் இந்த மண்ணுக்கு என் உடலும், காற்றுக்கு என் உயிர் மூச்சும் உரிமை யாக்கிடுமுன் 'நான்' என்னும் புலனறிவுக்கெல்லாம் புலப்பட்டிடாத ஓர் உள்ளுணர்வோடு இயங்கி வந்திட்ட நான், என்னைப் பற்றிய சில உண்மைகளை - மறை பொருளான செய்திகளை - வெளிப்படுத்திட விழைகிறேன். அதற்குள் சோழப் பேரரசர் கரிகாலரையும். ரோமாபுரி யிலுள்ள செழியனையும் நான் பார்த்திட வேண்டும். அவர்களை உடனே வரவழைத்திட ஏற்பாடு கள் செய்யச் சொல்லுங்கள்.' தான் இறக்கப்போவதைப் பற்றிப் பாண்டியவேந்தன் கூறிய சொற் களால் காரிக்கண்ணனாரின் உள்ளம் நெகிழ்ந்து விட்டது; கண்களும் குளமாகிவிட்டன. முத்துநகையோ தன் கொடியுடலே குலுங்கிடும் வண்ணம் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டாள். வழிந்திட்ட விழிநீரைத் தம் கொன்றைக்காய் போன்ற விரல் நுனியால் வழித்தெறிந்திட்ட புலவர். "...சோழப் பேரரசரை விரைவில் அழைத்து வந்திடலாம்; ஆனால் எங்கோ நெடுந்தூரத்திற்கு அப்பால் உள்ள செழியனை எவ்வாறு கடிதில் கொணர்ந்திட முடியும் என்பதுதான் கவலையினை அளிக்கின்றது" என்று தயக்கத்துடன் மொழிந்திட்டார். "ஏன், அவன் வருகிறவரை இந்த உடம்பிலே என் உயிர் தங்குமோ என்னவோ என்று அஞ்சுகிறீர்களா? ஆனால் புலவர்அவர்களே! நான்