ரோமாபுரிப் பாண்டியன்
623
ரோமாபுரிப் பாண்டியன் 623 அழகான நீண்ட பெரிய பேழையுடன் அவனுடைய அறையினுள் நுழைந்திட்டாள் முத்துநகை. "நீ சொல்வது சரிதான் முத்துநகை! எனக்கும் அவற்றையெல்லாம் கண்டு களித்திட வேண்டும் என்று ஆசைதான். ஆனால் உன்னுடைய வாயாடித் தோழி அதற்கு இடம் தந்தால்தானே? என்று கண்களைச் சிமிட்டினான் செழியன். "பார்த்தாயா, பார்த்தாயா? எவ்வளவு அபாண்டமான பழியை என்மீது போடுகிறார்? நானா அவற்றையெல்லாம் காணவேண்டாம் என்று இவருடைய கண்களைக் கட்டிப் போட்டேன்? இவர்தான், 'இரு இரு... போகாதே! நீ பக்கத்தில் இல்லாவிட்டால் பொழுதே போக மாட்டேன் என்கிறது' என்றெல்லாம் பல்லைக் காட்டிப் பசப்பிவிட்டு இப்போது என்னை வாயாடி என்கிறார்:... வாயாடி!" செல்லமாகச் சிணுங்கியவாறே சரியாகச் சூடு கொடுத்திட்டாள் தாமரை. அவளது சிணுங்கலைக் கண்டு மேலும் சிரித்திட்ட முத்துநகை. குரலைச் சற்று இழுத்தாற்போல் இப்படிக் கூறினாள்; "செழியன் அண்ணா! உங்கள் மீது எனக்கு இப்போது மிகுந்த இரக்கம் ஏற்படுகிறது!" “ஏனோ?’” 'அவளை வாயாடி என்று சாதாரணமாகச் சொல்லப் போய், நீங்களே இப்பொழுது வாயாடிப் பட்டம் வாங்கிக் கட்டிக் கொண்டீர்களே, அதை நினைத்துதான்! அதனாலேதான் பெண்களிடம் பேசும்பொழுது எந்த வார்த்தையையுமே அளந்து பேசிடவேண்டும், இல்லையோ...?" "போதும், தங்கச்சி! போதும். இனிமேல் உன் தோழியோடு பேசும்பொழுது, படி - மரக்கால் எல்லாவற்றையுமே பக்கத்திலே வைத் துக் கொண்டு நன்றாக அளந்து பேசுகிறேன். இப்போது அந்தப் பேழையை இப்படிக் கொண்டுவந்து திறந்து காட்டுகிறாயா? அகஸ்டஸ் என்னென்ன பொருள்களையெல்லாம் வழங்கியுள்ளார் என்று நாம் நம் கண்ணாலே அளந்து பார்ப்போம்!" -செழியன் இவ்வாறு செப்பிடவும் அவன் அமர்ந்திருந்த அகலமான கட்டில் மெத்தையிலேயே பேழை யினைக் கொணர்ந்து வைத்திட்டாள் முத்துநகை, அதனைத் திறந் திட்டவாறே. “நீ ஏன் எட்டியே நிற்கிறாய் தாமரை? நீயும் அருகில் வந்து பார். என்னென்ன விந்தையான பரிசுகளையெல்லாம் அகஸ்டஸ் அள்ளிக் கொடுத்திருக்கிறார் என்று உனக்கும் தெரிந்திட வேண்டாமா?" என்று அழைத்திட்டாள்.