உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624

கலைஞர் மு. கருணாநிதி


624 கலைஞர் மு. கருணாநிதி "எனக்கொன்றும் அவற்றைப் பற்றித் தெரிந்திடத் தேவையில்லை" அலட்சியமாகப் பகர்ந்திட்டாள் தாமரை. "என்ன அப்படிச் சொல்லிவிட்டாய்!" - "அந்தப் பொருள்களையெல்லாம் இந்தப் பேழையில் அடுக்கி வைத்தவளே நான்தானே?" "அப்படியா? ஆமாம்; நான் குறிப்பிட்டேனே அந்தப் பொருளும்" என்று முத்துநகை கேட்டு முடிப்பதற்குள் திறக்கப்பட்டுவிட்ட பேழையினுள் இருந்தவாறே 'பளிச்'சென்று மின்னி மூவருடைய கண்களையும் ஈர்த்துவிட்டது அது! அதனைக் கண்டதுமே "ஆமாம், இது எப்படி அகஸ்டசுக்குக் கிட்டியது?" - என்று துள்ளிக் குதித்து எழுந்து நின்றுவிட்டான் செழியன். 'அது மிகப் பெரிய கதை, அண்ணா! மிகப்பெரிய கதை! இதிலே வேடிக்கை என்ன தெரியுமா! ரோமாபுரிக்குச் சென்றிடத்தக்க தமிழகத் தூதுவர் மூலமாகவாவது இந்தப் பொருளினை அடைந்திட மாட்டோமா என்று கரிகால் சோழர் எத்துணையோ ஏக்கம் ஏங்கியிருக்கிறார். ஆனால், பல்வேறு சூழ்நிலைகளின் நெருக்கடியினாலும், யார் தூதுவராகச் செல்வாரோ என்று கடைசிவரை தெரியாததாலும் அவரால் உங்களிடம் இதுபற்றி நேரடியாகக் கலந்துரையாடிட முடியாமற் போய் விட்டது. உங்களை அழைத்து வருவதற்கு என்னை அனுப்பவதென்று பெருவழுதிப் பாண்டியர் முடிவு செய்த பின்னரே கரிகாலர் இதயத்தை அரித்துக் கொண்டிருந்த ஏக்கத்தைப் பற்றியும், அதனை நீக்கிடுவதற்காக நான் நிறைவேற்றிட வேண்டிய பொறுப்பினைப் பற்றியும் என் தந்தையார் மூலம் நான் அறிந்துகொண்டேன். எப்படியோ என் எண்ணம் ஈடேறிவிட்டது. - மகிழ்ச்சியிலே நீராடியவளாகப் பெருமூச் செறிந்திட்டாள் முத்துநகை. செழியனுக்கு வியப்பினையும், முத்துநகைக்குப் பெருமிதத்தையும் அளித்திட்ட அந்த அற்புதமான பொருள் தான் என்ன? அதன் பின்னே ஒளிந்திருந்த ஒரு வரலாறு தழுவிய கதைதான் என்ன? கரிகாலன் காலத்திலேயே தமிழக மாந்தர்க்குக் குறிப்பாகச் சோழமண்டலத்தைச் சார்ந்தவருக்கு தாங்கவொண்ணாத தலையிடி யைத் தந்தவண்ணமே பாய்ந்திருக்கிறது காவிரியாறு! ஆனால் அதனுடைய முரட்டுத்தனமான வெள்ளப் பெருக்கிற்கு முதல் பலி ஆகிக் கொண்டிருந்தவர்கள் குடகு நாட்டினைச் சார்ந்திட்ட பெருமக்களே! அங்கே 'பாகமண்டலா' என்னும் இடத்தருகேயுள்ள ஒரு நெடிய குன்றிலே இருக்கின்ற நீண்ட சுனையொன்றினைத் தேர்ந்தெடுத்து,