உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

ஒருவேளை குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை மத்திய சர்க்காரின் உத்தரவுகளை ஒழுங்காக அமுல் நடத்தப்படுகிற முறையை மற்ற மாகாணங்களையெல்லாம்விட சிறப்பாகவும், ஒழுங்காகவும் கொண்டிருக்கிற இந்த மாநில சர்க்கார் அவ்விஷயத்திலும் அவர்களுடைய கட்டளையை நிறை வேற்றுகிற முறையில் மிகத் தீவிரமாக நடந்துகொண்டு விட்டார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. அதன் காரணமாக மக்கள் தொகை குறைந்துவிட்டதோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. குறைந்து விட்டது என்பதற்காகக் கவலைப் படவில்லை. முன்னால் அது குறைந்ததனால் பார்லிமென்டில் நமக்குள்ள ஸ்தானம் 38 ஆகக் குறைந்துவிட்டதே என்பதுதான் கவலை. கனம் மதியழகன் குறிப்பிட்டது போல நமக்குள்ள எண்ணிக்கை குறைந்துவிடாதிருக்கவும், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகையை அதிகப்படுத்தவும், இப்போது நாம் அனுப்புவது 5 என்று இருப்பதை 7 என்றாவது உயர்த்தவும் முயற்சி எடுத்துக்கொண்டாகவேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ம்

அப்படி ஆக்கப்படுமானால் இந்த மன்றத்திலே 266 உறுப்பினர்கள் இடம் பெறக்கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆகவே, அதையும் இந்த அரசு மிகத் தீவிரமாகக் கவனிக்க வேண்டுமென்று நான் மிகப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

மாநகராட்சி மன்றத்தைப் பொறுத்தவரை ஒரு சில உறுப்பினர்கள் சிறைச்சாலைக்குச் சென்ற காரணத்தினாலோ, மாநகராட்சி மன்றத்திற்கு வரக் கூடிய சூழ்நிலை அவர்களுக்கு அமையாத காரணத்தினாலோ, திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த ஒருவரும், சயேச்சை அங்கத்தினர் ஒருவரும், கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர் ஒருவரும், ஆக எட்டுப் பேர் தங்களுடைய பதவியை இழந்திருக்கிறார்கள். அப்படிப் பதவியிழந்தவர்களை மீண்டும் பதவியிலே அமரக் கூடாது என்று நீதிமன்றம் கட்டளையிட்டுவிட்டது. அந்தக் கட்டளையைப் பற்றி நான் ஆராய விரும்பவில்லை ; தகாது. அந்த எட்டுப் பேர் இல்லாமலே மாநகராட்சி மன்றம்

நடைபெறுவது சாத்தியமாகலாம். ஆனால் தங்கள்