கலைஞரின் சட்டமன்ற உரைகள்
391
ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்போது 33.20கோடி ரூபாய் அளவிற்கு வளர்த்திருக்கிறோம்.
குடிநீர் வாரியத்திற்கு 18 கோடி ரூபாய் அளவிற்கு
ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.
திட்டத்திற்காக சென்னையில்
குடிசைப்பகுதிகளை மாற்றுவதற்கான, குடிசை மாற்றுத் மாத்திரம் 4கோடி ரூபாய் 1971-72-இல் செலவிட ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.
டி
அரிசன மக்களுக்காக 1967-ம் ஆண்டு 4 கோடி ரூபாய் என்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததை, இப்போது 7 கோடி ரூபாய் அளவில் அரிசன மக்கள் நலனுக்காக ஒதுக்கியிருக்கிறோம்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் நலனுக்காக 11/2 கோடி ரூபாயாக இருந்தது, இப்போது ஏறத்தாழ 41/2 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம். அரிசன மாணவர்களுக்கும், பின்தங்கிய மாணவர்களுக்கும் உணவு, உறையுள் ஆகிய இவைகளுக்காக உள்ள உதவித்தொகையை அதிகமாக்கி, இந்த மாமன்றத்தில் நாம் இந்தக் காரியத்தை எடுத்து நிறைவேற்றியிருக்கிறோம்.
குழந்தைகளுக்கு சத்துணவு ஊட்டுவது என்ற முறையில் 130ஆயிரம் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படிருக்கிறது.
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு நிதி திரட்ட தமிழக பரிசுச் சீட்டு மூலமாக 40லட்ச ரூபாய் என்ற அளவிலும், நான் விடுத்த அறிக்கைக்கேற்ப ஏறத்தாழ 20 லட்ச ரூபாய் சேர்ந்து, -நான் எதிர்பார்த்தது 40 லட்ச ரூபாய் என்றாலும், 60 லட்ச ரூபாய்க்கு மேல் பிச்சைக்காரர் மறுவாழ்வு நிதி தாண்டியிருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புக்காக 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான திட்டம் இந்த மாமன்றத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 6,500 ஆசிரியர்களுக்கு வேலை வழங்குகின்ற திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 50 உதவி மருத்துவர் பதவிகளை ஏற்படுத்துவது என்று இந்தக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. 100 மருத்துவப் பட்டதாரிகளுக்கு