உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்வது நல்லது அல்ல. விட்டு விடுவது நல்லது என்று கருதுகிறேன்.

பிற்பட்டோர்பற்றி இங்கே எடுத்துக்கூறப்பட்டது. இந்த அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்பட்டோருடைய நலனுக்கும் எடுத்துக்கொண்ட சீரிய முற்சிகளையெல்லாம் மாண்புமிகு உறுப்பினர்கள் எடுத்துக்காட்டினார்கள். அதிலே அ.தி.மு.க.வைச் சேர்ந்த திரு. வேலப்பன் அவர்கள் பேசுகின்ற நேரத்திலே பெரியாருடைய கொள்கையும், அண்ணா அவர்க ளுடைய கொள்கையும் பிற்பட்ட மக்களுக்கு இவ்விதச் சலுகைகள் செய்வது என்பதால், பொருளாதார ரீதியிலே முன்னேறிய சமுதாயம், பின்தங்கிய சமுதாயம் என்று பிரித்து வைத்துக்கொண்டு பொருளாதாரரீதியிலே பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இவ்விதச் சலுகைகள் வழங்கப்படவேண்டு மென்று சொன்னார்கள்.

ச்

இது பெரியாருடைய கொள்கையாக இருந்ததில்லை. பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கொள்கையாக இருந்த தில்லை. மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காக உழைக்கிற வேறு கட்சிகளுடைய தலைவர்களுடைய கொள்கையாக இருந்ததாக அறியவில்லை. ஆகவே, இந்தக் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள இயலாது.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலே உருது பேசுகிற முஸ்லீம்களை இணைப்பதைப்பற்றி முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர் அவர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். நண்பர் கோவைச் செழியன் அவர்கள் கொங்கு வேளாள சமூகத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கருத்தைக் குறிப்பிட்டார்கள். 30 ஆண்டு காலமாக முஸ்லீம் மக்கள் கேட்டு இப்போது நிறைவேறியிருக்கிறது. எந்த ஒரு கோரிக்கையும் கனிந்து, பழுத்த பிறகு நிறைவேறும் என்பதற்கு உருது! முஸ்லீம்கள் நேற்றையதினம் சேர்க்கப்பட்டது ஒரு உதாரணமாக இருக்கும். இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்துக் கொண்டு, அவர்களைப் பற்றியெல்லாம் அரசு பரீசிலிப்பதற்கேற்ற நிலைக்கு அவர்கள் எங்களை ஆளாக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வேன்.