உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

403


செழியன் ஒன்று சொன்னார்கள். சன்ஸ் ஆஃப் தி சாயில் என்ற ஒரு பெரிய பிரச்சினையைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அதை விளக்கமாகப் பேசுவதற்கு நேரமில்லை. பிரதமர் அவர்கள் கூட ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் முழுமையாக ஒப்புக் கொண்டதாக நான் அறியவில்லை. சன்ஸ் ஆஃப் தி சாயில் என்பதற்கு கடைநிலை ஊழியர்களாக இருப்பவர்கள் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்று சொல்லியிருப் பார்களேயல்லாமல் அதற்கு மேலே உள்ள பதவிகளுக்கு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வரக்கூடாது என்ற கருத்தை இன்றுள்ள இந்திய ஒருமைப் பாட்டிற்கு விரோதமாக யாரும் சொல்லியிருப்பார்கள் என்று கருதவில்லை. அப்படி வேறு மாநில முதலமைச்சர்கள் சொல்லியிருப்பார்களானால் அந்தக் கருத்து நம் மாநிலத்தைப் பொறுத்த வரையில் ஒத்து வராது. அந்தக் கருத்து நமக்கு உடன்பாடு அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

6

நண்பர் சுப்பு பேசுகிற நேரத்தில் 10 ரூபாய் டியர்னஸ் அலவன்சை பிராவிடண்டு பண்டில் சேர்த்தது தவறு என்று சொன்னார்கள். ரூபாய் 300, 200 சம்பாதிக்கக் கூடியவர்கள் இந்த 10 ரூபாயை மீத்து வைக்கவேண்டுமென்று எண்ணுவார்கள். இந்த 10 ரூபாய் தந்து அவர்கள் மீத்து வைக்காமல் இருப்பதைத் தவிர்த்து நாமே மீத்து வைத்து ஒரு ஆண்டு காலம் மீத்து வையுங்கள் என்று சொல்கிறோம். தர வேண்டுமென்ற அனுதாப உணர்வும் அதேநேரத்தில் நம் நிதி நிலைமை நெருக்கடியை உத்தேசித்தும் செய்யப்பட்டிருக்கிறது.

இன்னொன்று சொன்னார்கள். எம்.எல்.ஏ.க்குத் தரப் படுகிற படி மிகக்குறைவு, இது வேறு மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது என்று இன்றைக்கும் குறிப்பிட்டார்கள். நேற்றைய தினம் திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்கள் சொன்னார்கள். ஐந்து ரூபாய் உயர்வு என்று வெளியில் சொல்லக் கேவலமாக இருக்கிறது. ஐந்து ரூபாய் உயர்வா என்று மற்றவர்கள் கேட்கிறார்கள் என்று சொன்னார்கள். நான் இந்தப் படி உயர்வினுடைய சரித்திரத்தைப் பார்த்தேன். ஒரு காலத்தில்

ல்