உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


5

12/2 ரூபாயாக இருந்து 21/2 ரூபாய் உயர்த்தப்பட்டு 15 ரூபாயானது. அப்போது அவர்களைப் பார்த்து 21/2 ரூபாய்தானா என்று யாரும் கேட்கவில்லை. நாம் 5 ரூபாய் தரும்போது, 5 ரூபாய்தானா என்று கேவலமாகச் சொல்வது, அதெல்லாம் எங்கள் ஜாதகம். இரண்டரை ரூபாய் அதிகமாகக் கொடுக்கும் போது சொல்லவில்லை. ஐந்து ரூபாய் அதிகமாகக் கொடுக்கும் போது, கொடுக்கிற நேரத்தில் கேவலம் என்று பேசுவதாகச் சொன்னார்கள். பதினைந்து ரூபாய் 20 ரூபாயாகி 25 ரூபாயாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நாம் மகிழ்ச்சியடைய வேண்டுமேயல்லாமல் இந்த அளவிற்காவது செய்ய முடிந்ததே என்று மகிழ்ச்சியடைய வேண்டுமேயல்லாமல் இதைக் கண்டிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டுச் சொல்வேன்.

ஐ.ஏ.எஸ். சில பேருக்கு கிடைக்காத காரணத்தினால் அரசாங்க அதிகாரிகள் யாரோ தாக்கிப் பேசிக்கொண்டிருப்பதாக நண்பர் சுப்பு சொன்னார்கள். நாம் ஐ.ஏ.எஸ். கிடைப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. ஐ.ஏ.எஸ்.-ஐ யார் யாருக்குக் கொடுங்கள் என்று சொல்கிற இடத்திலே நாங்கள் இல்லை. படித்தவர்கள், அதற்கான தகுதி பெற்றவர்கள் வருகிறார்கள். ஊன்றி கவனிப்பதெல்லாம் இந்த ஐ.ஏ.எஸ்.-இல் எத்தனை தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். எத்தனை பிற்படுத்தப் பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை மிக மிக அதிகமான உன்னிப்போடு கவனித்துக்கொண்டிருக்கிறேன். அதை விடுத்து எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கவனிப்பது இல்லை. அரசாங்க, அதிகாரிகள் அரசியல் பேசுகிறார்கள் என்றால், அதுவும் ஐ.ஏ.எஸ். கிடைக்கவில்லையென்று பேசுகிறார்கள் என்றால், ஐ.ஏ.எஸ். கிடைத்ததற்காக அரசியல் பேசினாலும் சரி, ஐ.ஏ.எஸ். கிடைக் காததற்காக அரசியல் பேசினாலும் சரி, அவங்களெல்லாம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மாத்திரம் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நண்பர் ஜேம்ஸ் அவர்கள் சொன்னார்கள், விசாரணைக் குழு எதற்காக என்றெல்லாம் சொன்னார்கள். விசாரணைக் குழுவை நாங்கள் மறுக்கிறோம் என்று- சொன்னார்கள்.