உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

405


ல்

வெளியேயும் சொன்னார்கள். இந்த அவையிலும் சொன்னார்கள். இதை கருப்பு மசோதா ரௌலட் சட்டம் என்றுச் சொன்னார்கள். இதனால், மக்களுக்குக் குழப்பம் வந்துவிடக் கூடாது. அவர் ரௌலட் சட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். விவரம் தெரியாமல் இருக்கலாம். இந்தக் குழுவை நியமிக்கிற நேரத்தில், இதற்காக சட்டங்களை நிறைவேற்றுகிற நேரத்தில், இதுதான் ரௌலட் சட்டம் என்று என்று மக்கள் தவறான கருத்தைக் கொள்ளக்கூடாது. நான் ஜேம்ஸ் அவர்களுக்குச் சொல்வேன். இந்தச் சட்டம் செலக்ட் கமிட்டிக்கு விடப்பட்ட நேரத்தில் வெளியேறினார்கள். வாக்அவுட் செய்தார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சியால் ராஜஸ்தானிலும், மராட்டியத்திலும் இதே போன்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மாறுதல் என்னவென்று பார்த்தால் வேண்டுமென்றே அவதூறு என்று குற்றம்சாட்டினால் அப்படிக் குற்றம் சாட்டியவர்களுக்கு மூன்று ஆண்டு காலம் தண்டனை விதிக்கப்படும் என்று நாம் இங்கே சுட்டிக்காட்டி இருப்பதைப் போலவே மராட்டியத்திலும், ராஜஸ்தானிலும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

ம்

ஒரு பெரிய வேறுபாடு என்னவென்றால் நம்முடைய மாநிலத்தினுடைய சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்கள் குற்றவாளியாக ஆகிவிட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்படும். அவர்களுக்கு 7 ஆண்டு காலம் தண்டனை விதிக்கலாம் என்று சட்டம் நிறைவேற்ற இருக்கிறோம். ஆனால் ராஜஸ்தானிலும், மராட்டியத்திலும் நிலைமை என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இன்னின்ன குற்றம் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டால் அது சர்க்கார் மூலமாக கவர்னருக்கு அனுப்பப்பட்டு கவர்னர் சட்டசபைக்கு அனுப்பினால் அது சட்டசபையோடு முடிவடைகிறது. ஏழு வருஷம் என்பது அங்கே கிடையாது. அது மாத்திரமல்ல, மராட்டியத்திலும், ராஜஸ்தானி லும் யார் யார் இந்தப் பொதுப்பணியிலே, பொது வாழ்க்கை யிலே இருக்கிறவர்கள் வருகிறார்கள் என்று பார்த்தால், முதல மைச்சரைத் தவிர மற்ற அமைச்சர்கள், மற்றவர்கள் வருகிறார்கள்.