உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

435


1974-ம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் செங்கற்பட்டு, மதுரை, கோவை, தென்னாற்காடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங் ய களுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்படுவது பற்றி முயற்சிகள் எடுக்கப்படும்.

ஓய்வூதியத்திற்கு இருந்த மேல் வரம்பும் நீக்கப்பட்டிருக் கிறது. அரசு அலுவலாளர்களுக்குப் பண்டிகை முன்பணம் வழங்கும் திட்டம் அரசிதழ் பதிவில்லாத ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன். இறப்பு அல்லது ஓய்வுக்கால கிராசுடி குடும்ப ஓய்வூதியத்திற்காகப் பிடித்துக்கொள்ளப்படும் தொகை இரண்டு மாத ஊதியத்திலிருந்து ஒரு மாத ஊதியமாகக் குறைக்கப் பட்டுள்ளது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவச் சலுகைகள் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

பதவியிலிருந்து ஓய்வு பெறுகிற அரசு அலுவலர்கள் தாங்கள் கடைசியாகப் பணிபுரிந்த இடத்திலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பயணப்படி அளிக்கும் வசதியை இந்த அரசு செய்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓய்வூதியக் கோப்புகள் - அந்த ஃபைல்கள் - விரைந்து முடிவு எடுக்கப்படுவது இல்லையென்ற குறைபாட்டை மாண்புமிகு உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். அதற்காகத்தான் ஒரு இடைக்கால ஏற்பாடாக ஓய்வு பெறும் அரசு அலுவலர்கள் அனைவருக்கும் (அரசிதழ் பதிவு பெற்றவர்களுக்கும்) அவர்கள் ஓய்வு பெற்றவுடனேயே தற்காலிக ஓய்வூதியம், இறப்பு ஓய்வுக்கால பணிக்கொடை கொடுக்கப்படவேண்டுமென்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

1974-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 1-ம் தேதி முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு இரண்டு திங்கள் ஆகியும் பணிக்கொண்ட கொடுக்கப்படாமல் இருந்தால் அவர்களுக்குச் சேரவேண்டிய தொகைக்கு சதவீதம் வட்டியும் சேர்த்துக் கொடுக்க வேண்டுமென்ற மாற்றத்தையும் நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.

தாராள ஓய்வூதிய விதிகளின் நலன்களைப் பொறுத்தவரை அரசுப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் அதே நன்மைகளை மானியப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பெறுகிறார்கள்.