உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

447


படுவதற்கு அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்பதை மாத்திரம் நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் பற்றி இரண்டு, மூன்று குற்றச்சாட்டுகளை இங்கே ஹாண்டே அவர்கள் சொன்னார்கள். இன்டர்வியூ மார்க்குகளையெல்லாம் ஒரு உறுப்பினர் யாருக்கும் கொடுக்காமல் தானே தன்னுடைய பையில் வைத்துக் கொண்டு போய்விட்டார் என்பது அவருடைய குற்றச்சாட்டு. அதுபற்றி விசாரித்ததில், அது முற்றிலும் தவறான தகவல் என்றும், ஒவ்வொரு நாளும் மார்க் பட்டியல் (மார்க் லிஸ்ட்) அவ்வலுவலகத்தில் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. டாக்டர் ஹாண்டே அவர்களுக்கு கிடைத்தது சரியான தகவல் என்று கொள்ள முடியாது.

இன்னொன்றையும் சொன்னார்கள். அறநிலையத் தேர்வுக்கு தேர்வுக்காக 30 மார்க்குகளும், இன்டர்வியூக்கு 400 மார்க்கும் என்று சொன்னார்கள். 400 மார்க் என்பது சரித்திரத்தில் இல்லாத செயல் என்று சொன்னார்கள்.

நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வேன். சரித்திரத்தில் இல்லாத செயல் என்று சொன்னார்கள். ஒரு வேளை 400 மார்க் வைத்து இருப்பது ஹாண்டே அவர்களுக்கு வேண்டுமானால் சரித்திரத்தில் இல்லாத செயலாக இருக்கும். ஆனால் 1964 அக்டோபர் 21-ம் 21-ம் தேதி சர்க்கார் பிற்ப்பித்த அந்த ஆணையிலேயே அன்றைக்கே இருக்கிறது. 400 மார்க்குகூட அல்ல. அறநிலையத் துறைத் தேர்வுக்கு 450 மார்க் வேண்டு மென்று அன்றைக்கே இருக்கிறது. ஆகவே, அவர்கள் சொன்னது கூட 400 என்பது தவறாகும். 450 மார்க்கு வேண்டும். இது 1964-ம் ஆண்டிலிருந்து அமலில் இருந்துவரும் விதிமுறையாகும் என்று சொல்லிக்கொள்வேன்.

து

இன்னொன்றையும் சொன்னார்கள். டம்மி முறையில் பரீட்சை நெம்பர் போடுவது கைவிடப்பட்டது என்று சொன்னார்கள். இது மாற்றப்பட்ட பிறகு சரியான முறையில் இல்லை என்று சொன்னார்கள். ஒரு வேளை குறைவாக வரும் மனுக்கள் அதிகமான காரணத்தால் அந்த முறை தவிர்க்கப் பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். அந்த முறையை மீண்டும்