உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


894. TAM


தந்தை பெரியார் போக்குவரத்து நிறுவனத்துக்கு 35 இலட்சம் ரூபாய் பங்கு மூலதனம் அளிக்கவும், வனத்தோட்ட நிறுவனத்துக்கு 15 இலட்சம் ரூபாய் பங்கு மூலதனம் வழங்கவும், சர்க்கரை ஆலைகள் நிறுவனத்துக்கு 5 இலட்சம் ரூபாய் பங்கு மூலதனம் தருவதற்கும், தமிழ்நாடு உப்பள நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் பங்கு மூலதனம் அளிக்கவும் துணை மதிப்பீடுகளில் வகை செய்துள்ளோம். தமிழ்நாடு கோழி வளர்ப்பு நிறுவனத்துக்கு முன்னர் கடன் தொகையாக வழங்கப் பட்ட 30 இலட்சம் ரூபாய் அந்நிறுவனத்தின் பங்கு மூலதனமாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான அடையாள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னையிலும் ஆளியாறு நகரிலும் உள்ள பொதுப்பணித்துறை தொழிற்கூடங்களை ஒரு புதிய நிறுவன அமைப்பாக மாற்றுவதற்கு அடையாள நிதி ஒதுக்கமும் கோரப்பட்டுள்ளது.

6

பேருந்துகள் வாங்கும்பொருட்டு

பல்லவன்

போக்குவரத்து நிறுவனத்துக்கு மத்திய அரசு கடனாக அளித்துள்ள மூன்று கோடி ரூபாயை வழங்குவதற்கும் நாம் நிதி ஒதுக்கம் செய்துள்ளோம். இதுவன்றி பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களுக்கு கடன்களும், வழி வகை முன்பணங்களுமாக மொத்தம் 3.93 கோடி ரூபாய் அளிக்கவும் மேலும் வகை செய்யப்பட்டுள்ளது. 002401

தமிழ்நாடு கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழிவகை முன்பணமாக வழங்கியதற்கும், வீட்டு வசதி வாரியத்துக்கு வழிவகை முன்பணமாக 34 இலட்சம் ரூபாய் வழங்கியதற்கும் 56 ஆவது மானியத்தின் மூலம் மன்றத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

துணை மானியக் கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள முக்கியமான ஒரு சில செலவினங்களை இதுவரை நான் எடுத்துக் கூறியுள்ளேன். மன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள விரிவான அறிக்கையில், இவை பற்றிய விளக்கங்களையும், பிற செலவினங்கள் பற்றிய விவரங்களையும் காணலாம் என்று கூறி, 1974-75ஆம் ஆண்டிற்கான இந்த இறுதித் துணை மதிப்பீ ஏற்று இசைவளிக்குமாறு வேண்டுகிறேன். வண

>CENTEW கம்RAகள

CHENNAI - 600 085.