உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




டாக்டர் ச.வே. சுப்பிரமணியன் மேனாள் இயக்குநர்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

முகவுரை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 5-வது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டித் தமிழர் தொடர்புடைய பல நூல்களை வெளியிடுகின்றது. அதில் ஒரு நூலாக தமிழக நாட்டுப்புறக் கலைகள்' என்ற நூல் அமைகின்றது.

டாக்டர் ஏ.என்.பெருமாள் அவர்கள் தமிழ் நாடகத் துறையில் வல்லுநர், தமிழக நாட்டுப்புறக் கலைகளை முறையாகப் பகுத்தும் தொகுத்தும், செவ்வைப்படுத்தியும் சிறந்த முறையில் இந்நூலை அமைத்துள்ளார். தமிழரின் பண்பாட்டை உணர்த்துவதற்கு இந்நூல் பெரிதும் துணைபுரியும். சிறப்பாகச் சமூகச் சார்புக் கலைகள், சமயச் சார்புக் கலைகள் ஆகிய இவற்றின் இடையே அமைந்த சிறப்புகளை நுணுகிப் பார்த்துத் தெளிவாகத் தந்துள்ளார். இக்கலைகளைப் பிற நாட்டுத் தொடர்போடும் ஒப்பிட்டுக் கூறியுள்ளமை பாராட்டத்தக்கது. இந்நூல் தமிழ் மக்களுக்குச் சிறந்த விருந்தாக அமையும் என்று நம்புகிறேன்.

இந்நிறுவன செயல்பாடுகள் அனைத்திற்கும் ஊக்கமும் ஆக்கமும் அளித்து வருகின்ற கல்வி அமைச்சர் மாண்புமிகு செ. அரங்கநாயகம் அவர்களுக்கு எங்கள் நன்றி என்றும் உரித்தாகுக.

ச.வே.சுப்பிரமணியன்