ளைய
3
காதல் உணர்வு இயற்கையாக அமைந்து இயல்பாருத் தோன்றுவது அதைத் தடுக்கவோ தவிர்க்கவோ இயலாது. இருப்பினும் கட்டுப்படுத்தவும் நெறிப்படுத்தவும் முடியும். முன்னாளைய மனிதனின் காதல் செய்கைகளுக்கும் இன்னா செய்கைகளுக்கும் வியத்தகு வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம். அறிவுப்பெருக்கும் கால ஒழுங்கும் இத்தகைய மாற்றங்களுக்குக் காரணங்களாக அமைகின்றன. இவ்வாறே அனைத்து உணர்வுகளும் சமுதாயச் சூழ்நிலைக்குத் தக்கவாறு கட்டுப் படுத்தப் பெற்று ஒழுங்கு செய்யப்படுகின்றன. கலை யுணர்வும் இத்தகைய விதிக்கு அப்பால்பட்டது அன்று.
(தொடக்
தொடக்க கால மனிதன் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மனம் விரும்பியவாறு செயல்பட்டு தன் உணர்வைக் காட்டியுள்ளான் அன்றைய கால கட்டத்தில் அவனுக்கிருந்த அறிவும் அவன் வாழ்ந்த சூழலும் அவனது கட்டுப்பாடற்ற உணர்ச்சிப் புலிப் பாட்டை ஒப்புக்கொண்டன. வரம்பில்லாத நிலத்தில் காடு மேடாக வளரும் பயிராகப் பண்டை மனிதனின் கலைகள் இருந்திருக்க வேண்டும். அன்று ஆடுவதும் பாடுவதும் காட்டாற்றுப் போக்காகவே அமைந்திருக்கும். தொடக்க கால கலைகளுக்கு இயற்கையான மனவுணர்வே முழுநிலையில் உந்து ஆற்றல் கருவிகளாக அமைந்திருக்க வேண்டும். அவற்றைக் கட்டுப்படுத்தி ஒழுங்காகச் செலுத்துவதற்கு உதவும் விசைகள் ஒவ்வொன்றாகப் பின்னர்தான் பொருத்தப் பெற்றிருக்க வேண்டும். கலைத்திறனும் கலை நுட்பமும் இத்தகைய கலை ஒழுங்குக்கு வழி வகுத்திருக்கும். சுவைப்போரின் மனம் மாற்றங் களை நாடி விரும்பும் போது அவர்களின் எண்ணங்களுக்குத் தக்கவாறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.
பயன்
மனிதனுக்கு இயற்கையாக அமைந்த கலையுணர்வின் அடிப்படையில் தோன்றிய கலைகள் காலவுணர்வுகளினால் பலவகையான மாற்றங்கள் அடைந்து பட்டறிவால் பாட்டில் பெருகி நுண்ணறிவால் திறம்பெற்று மக்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் அரும்பெருஞ் சாதனைகளாக இன்று பலுகிப் பெருகியுள்ளன. முன்னாளில் ஒன்றாக இருந்த சில கலைகள் இன்று அமைப்பிலும் வெளிப்படுத்தும் முறையிலும் மாற்றங் கொண்டு தொடர்புடைய பல்வேறு கலைகளாக உருவெடுத்து உள்ளத்தையும் அறிய முடியும். பாடிப்பாடி ஆடும் கூத்துக்கலை குறிப்பிட்ட பாடலைப் பொருந்தி நடித்து ஆடும்போது நடனமாகவும் தொடர்புடன் நீளும் கதைப்