2
யான உணர்வு முகிழ்ப்பில் ஒன்றாகவே உள்ளது. கலை உணர்வு என்று சிறப்பாகக் கூறுகிறோம்.
அடிப்படை உணர்வுகள்
அதனையே
இயற்கையின் வியப்பான தோன்றலான மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து பலவகைகளில் வேறுபட்டு விளங்குகிறான். ஆயினும் சில அடிப்படையான உணர்வுகளில் அனைத்து உயிரினங்கள் போன்றே மாறுபாடின்றிக் காணப்படுகிறான். உடல் வளர்க்க உணவு தேடுதல், இனம் பெருக்க துணையை நாடுதல், உயிரைக் காக்க உடல்வலிமையைக் காட்டல் போன்ற உணர்வுகள் உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவானவை. இத்தகைய உணர்வுகளை இயற்கையாக உடைய மனிதன் தன் னுடைய சிறப்பான அறிவாற்றலால் சீரிய முறையில் சிந்தித்துப் பலநிலைகளில் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் வேறுபட்டு முன்னேறியுள்ளான். உணர்வுகளை மேம்படச் செய்யவும் கட்டுப்படுத்தவும் அவனுடைய அறிவாற்றலால் முடிந்தது. தோன்றிய உணர்வை நெறிப்படுத்தும் வலிமையும் அவனுக்கு இருந்தது. புலன்கள் புறப்பார்வையால் காண்பதைத் தன் அறிவுக் கண்களால் கலையாகக் காணும் அகப்பார்வையும் மனிதனுக்கு இருந்தது. அறிவுடன் மனிதன் என்று தோன்றினானோ அன்றிலிருந்து அவனுக்குக் கலையுணர்வு தோன்றியதாகக் கருதலாம்.
இயற்கை
பட்டறிவே (exper.eace) மனித மனத்தை ஒழுங்கு செய்யும் உன்னதக் கருவியாக அமைகிறது. பிறர் சொல்லி அறிவதைக் காட்டிலும் தான் பட்டு அறிவதே மனதில் ஆழமாகப் பதிவதை ஒவ்வொருவரும் தங்களுடைய பட்டறிவின் வாயிலாக நன்கு அறிவர். தொடக்க காலத்திலிருந்தே மனிதவுணர்வு பட்டறி வால் பதப்பட்டும், பட்டை தீட்டப்பட்டும் வந்துள்ளது. அறிவு பெருகப்பெருக மனிதனின் சிந்தனை ஆற்றல் வளர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் அடிப்படையான இயற்கை உணர்வில் மனிதன் அன்றும் இன்றும் ஒன்றாகவே இருக்கிறான். என்றும் மாறுபடாமலே இருப்பான் என்பதும் உறுதி. இந்த உண்மை யான உறுதியிலிருந்து மாறுபடாமல் கலையுணர்வு தோன்றி வளர்வதைக் கண்டு அறிதல் வேண்டும். காலமாற்றத்தாலும் அறிவு வளர்ச்சியாலும் உணர்ச்சிகளில் வெளிப்புலப்பாடு மாற்ற மடைந்து தோன்றுகிறது.