உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழக நாட்டுப்புறக் கலைகள்

மனிதனின் கலை உணர்வு

கலை அறிமுகம்

அவற்றை

இன்பமும் துன்பமும் இணைந்தது மனித வாழ்வு. உணர்ந்து அனுபவிப்பது மனம். மனிதனின் மனத்திலிருந்து பல்வேறு உணர்வுகள் உதித்து எழுகின்றன. உணர்வின் பயனாகப் பலவகைச் செயல்களைச் செய்ய மனிதன் முற்படு கிறான். அவற்றில் நன்மையும் தீமையும் விளைகின்றன. நல்லறிவால் நன்மை செய்ய வேண்டும் என்று விரும்பும் மனிதன் தன்னுடைய நுண்ணறிவால் பிறர் வியந்து பாராட்டும் அருஞ் செயல்களைச் செய்ய முயல்கிறான். ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் இயற்கையாக அமைந்திருக்கும் திறமையைப் புலப் படுத்திக் காட்ட ஆவல் கொள்கிறான். நுட்பமான அறிவால் திறமையை வெளிப்படுத்தும் மனவுந்தலில் கலைமுகிழ்ப்பு ஏற்படுகிறது. ஒருவர் தன்னுடைய நல்லறிவால் ஓர் அருஞ் செயலை நுட்பமாகவும் திறமையாகவும் செய்து பிறர் வியந்து பாராட்டி அதனை விரும்புமாறு காட்டுவதில் கலைத்தன்மை அமைகிறது. கலைத் தன்மைக்கு அடிப்படையாக வேண்டியது மனிதனின் கலைவுணர்வாகும். கலைஞனும் சுவைஞனும் கலை உணர்வுக்கு ஆட்படுவதில் கலை சிறந்து வளர்கிறது.

உணர்வின் பயனாக மனவுந்தல் ஏற்படுகிறது. அத்தகைய உந்தல் புறச்செயலால் புலப்படுத்தப் பெறுகிறது. இயற்கைக் காட்சிகளை இனிதாகக் காணும் கவிஞன் இலக்கியக் கலையைப் படைக்கிறான். ஓவியன் படங்களை வரைகிறான். ஆடல் வல்லான் இன்பக் களிநடம் புரிகிறான். இசைவல்லான் இனிமையாகப் பாடுகிறான். ஒரே சூழ்நிலையில் தூண்டப்படும் உள்ளுணர்வு. மனிதனின் பல்வேறுவகைத் திறமையினால் பல்வேறுபட்ட கலைகளாக உருவாகி வெளியுலகைக் கவர்கிறது. திறமையின் மாற்றத்தால் கலைகள் மாறுபட்டாலும் அடிப்படை