உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5

கலைகள் என்று அழைக்கலாம். தொடக்க காலத்தில் மனிதன் இயற்கையுடன் பின்னிப் பிணைந்தே வாழ்ந்து வந்தான். வாழ்வுக்கு வேண்டிய வசதிகள் வாய்ப்பாக அமையும் இடங்களில் குடியமர்ந்து உணவுக்குத் தேவையான தொழில்களைச் செய்து மன நிறைவு பெற்று இன்பப் பொழுதுபோக்காகப் பலவிதமான கலைகளை உருவாக்கி மகிழ்ந்துள்ளான். அவனுடைய களிப்புக்குக் கட்டுப்பாடுகளோ விதிமுறைகளோ கிடையாது. போட்டியும் பூசலும் அதிகம் இருக்க இடமில்லை. மக்கள் நெருக்கம் குறைந்த காலம். தன் திறமைக்குத் தக்கவாறு கலை களை உருவாக்கும் சூழல் அமைந்திருந்தது. கலையுடன் கலைஞன் ஈடுபட்டு தனக்கும் பிறருக்கும் இன்பம் கொடுத்தான். சிறப்பாக இன்பக் களிப்பு என்ற ஒரே நோக்கத்துடன் நாட்டுப் புறக் கலைகள் தோன்றி வளர்ந்தன.

(நாட்டுப்புறக் கலைகள் மனிதனின் உள்ளத்தில் ஊறி எழும் உண்மையான உணர்ச்சிகளின் வடிகால்களாக அமைந்துள்ளன. சுருங்கக் கூறின் இக்கலைகள் மக்களுடைய உணர்ச்சிகளின் உயிரோட்டமான மாற்று உருவங்கள் ஆகும். இன்பம் பொங்கி எழும். துன்பம் துவண்டு பாயும் வீரம் விளங்கிச் சிறக்கும். சினம் கடுகடுத்துத் தோன்றும். அச்சம் நடுநடுங்கிப் பதுங்கும். இழிவரல் அருகியும் நகை பெருகியும் காணப்படும். இத்தனையும் கூடிக் கலந்து மனித மனத்தை உருவகித்துக் காட்டுவது நாட்டுப் புறக் கலைகள். புற நடிப்பை விடவும் உள்ளத் துடிப்பே சிறப்பாகப் புலப்படும்.)

உண்மையான உணர்ச்சியின் வெளியீடாக நாட்டுப்புறக் கலைகள் அமைவதினால் அவை மாசற்ற மக்களின் மனதைக் கவர்ந்து காலங்காலமாக வேர்விட்டுத் தழைத்து வளர்ந்துள்ளன. பெரும்பாலான நாட்டுப்புறக் கலைகளை மக்கள் ஈடுபாட்டுடன் சுவைத்து மகிழ்வதினால் மாறும் காலத்தாலும் மயக்கும் நாகரிகத்தாலும் அவற்றை மங்கச் செய்யவோ மறைத்து விடவோ முடியவில்லை. இன்றும் நாட்டுப்புற மக்கள் இத் தகைய பழமையான கலைகளைத் தங்களுடைய வாழ்வியலின் ஒரு பகுதியாக மதித்துப் பாராட்டி உயிர்ப்புடன் வளர்த்து வரு கின்றனர். நாகரிகத்தின் தாக்கம் நாட்டுப்புறக் கலைகளை நசுக்கப் பார்த்தாலும் அவற்றை ஆற்றலுடன் தாங்கி கால வெள்ளத்தைக் கடந்து அவை இன்றும் வாழ்ந்து கொண்டிருக் கின்றன. இத்தகைய உறுதியான பிடிப்பில்தான் நாட்டுப்புறக் கலைகளின் உண்மையான உயர்வை உணர முடியும். அங்கங்கே