உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சில கலைகள் மங்கி மறைந்து விட்டதாகத் தோன்றினாலும் உண்மையில் அவை வேறு கலைகளுடன் இணைந்து மாற்றுருவங் களாக வாழ்ந்து வருவதைக் காணலாம்.

கலைகளின் வளர்ச்சிப் படிகள்

கலைகளின் வளர்ச்சி நிலையை மூன்று படிகளாகக் காணலாம். தொன்மைக் கலை நிலை (Primitive art) நாட்டுப் புறக் கலைநிலை (Folk art) திருந்திய கலைநிலை (Classical art) ஆகிய படிநிலைகளில் கலைவளர்ச்சி அமைவதை மிகத் தெளிவாகக் கண்டு உணரலாம். பழங்குடி மக்கள், நாட்டுப்புற மக்கள், நாகரிக மக்கள் ஆகியோருடைய கலை இயல்புகளைக் கொண்டு இவற்றை வகையிட முயலலாம். மூன்று விதமாகக் கலைக் கூறுகள் அமைகின்றன. அனைத்தும் அடிப்படை நோக்கத்தில் ஒன்றுபட்டும் நடப்பு முறையில் வேறுபட்டும் தோன்றுகின்றன. உணர்ச்சி உந்தலின் வெளிப்பாடு, இன்பத்தின் முகிழ்ப்பு ஆகிய இருநிலைகளில் அனைத்துக் கலைகளும் எக் காலத்திலும் எந்த இடத்திலும் எவரிடத்திலும் ஒன்றாகவே அமைந்து விளங்குகின்றன. ஆயினும் வெளிப்படுத்தும் முறை யிலும் இன்ப நோக்கத்திலும் வேறுபாடுகள் தோன்றுகின்றன. அறிவு வளர்ச்சியால் விதிகளும் கட்டுப்பாடுகளும் தோன்று கின்றன. விதிகளின் மாற்றத்தால் வெளியீட்டு மு றைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சமூக அமைப்பு காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும் மாறுவதைச் சமூகவியல் விளக்கும். மனித மன வளர்ச்சியை மானிடவியல் கூறும். இயற்கைச் சூழல் இடத்துக்கு இடம் வேறுபடுவதைப் புவியியல் அறிவிக்கும். இவை அனைத்தும் மனித வாழ்வைப் பாதிக்கும் கூறுகளாக உள்ளன. இத்தகைய பாதிப்புகள் கலைவுலகையும் தொட்டு மாற்றமடையச் செய்கின்றன. இயற்கையோடு ஒன்றி வாழும் இயல்புடைய மிகப் பழங்கால மனிதனின் கலையாக்கங்கள் இடத்துக்கு இடம் மாறுபடுவதற்கு இதுவே காரணமாக அமைந்துள்ள து. மணிப்புரி நடனத்தின் ஆடல் முறை அந்த இடத்து இயற்கைச் சூழலை மிகச் சிறப்பாகப் புலப்படுவதை அறிஞர் கண்டு உணர்ந்து விளக்கு கின்றனர்.

1. Projesh Banerji, The folk-dances of India, Kitabistan, Allahabad, 1959, p. 4.