உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7

மணிப்பூர் அடிக்கடி சுழல்காற்று வீசும் மலைப்பாங்கான இடம். காற்று அடிக்கும் போது மரங்களில் மேற்பகுதி வேக மாகச் சுழன்று ஆடும். பல நேரங்களில் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு கீழே சாயும். இதைக் கண்ட மனிதனின் உள்ளத் தில் இக்காட்சி ஆழமாகப் பதிந்து விடுகிறது. பின்னர் அவனது ஆட்டத்தில் புலப்படுத்தப்படுகிறது. மணிப்புரி நடனத்தின் தொடக்க கட்டத்தில் நடனம் ஆடுபவர் தங்கள் உடலின் மேற் பகுதியை சுழற்றி சுழற்றி வேகமாக ஆடுவர். கையை நீட்டி நீட்டி ஆடுவர். இறுதியில் வேகமாகத் தரையில் சாய்வர். இந்த ஆடலையும் அந்த இடத்து இயற்கைச் சூழலையும் பொருத்திக் காணின் வியப்பான ஒற்றுமை இருப்பதைக் காணலாம். இடங்களில் நெல் அறுவடை கால நடனங்கள் நடைபெறு கின்றன. அவற்றில் நெற்பயிர் கதிர் முற்றிக் குழைவதைப் போன்ற சாயலைக் காணலாம்.

சில

தொன்மைக் காலக் கலைகளில் பல இவ்வாறுதான் முதன் முதலில் தோன்றியிருக்க வேண்டும். மனிதன் இயல்பாக அழகுணர்ச்சி உடையவன். அந்த உணர்ச்சியும் கலைகளுக்குத் தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும். பழங்குடியினரான லம்பாடிகள் பல வண்ண ஆடைகளைக் கட்டுவதை மிகவும் விரும்புகின்றனர் மேலும் தங்கள் ஆடைகளில் நகைக் கற்கள், மணிகள், சோழிகள், கண்ணாடித் துண்டுகள். தந்த உலோக நகைகள் ஆகியவற்றை அழகுணர்வுடன் இணைத்துள்ளனர். இவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை நடனம், இசை ஆகிய கலைகளில் மிகுந்த ஆவலும் நல்ல தேர்ச்சியும் உடையவர் காணப்படுகின்றனர். ஆனைமலையுள்ள (கோவை மாவட்டம்) காடர்கள் குறிஞ்சி நில இயல்புக்குத் தக்க பண்பாடு களையும் கலைகளையும் கொண்டு விளங்குவதை இன்றும்

களாகக்

காணலாம்.

நீலகிரி மலையில் வாழும் தோடர்களும் முன் காலம் தொட்டு அழகுணர்வும் கலை முகிழ்ப்பும் உடையவர்கள் என்பதற்குச் சில அரிய சான்றுகள் கிடைத்துள்ளன. சிவப்புக் களிமண்ணி னாலான (Terracotta) ஒரு பெண்ணின் உருவத்தைக் கொண்டு அவர்களுடைய கலையுணர்வை நன்கு அறியலாம். அந்தப் பெண் ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளாள். அவளது ஒரு தலை யிலும் அடுத்த கை ஏதோ ஓர் செயலிலும் உள்ளதாக உருவம் அமைகிறது2. அவள் தன்னை அழகு படுத்துவதாகக் கருதலாம்.

கை

2. நீலகிரி தோடரின் களிமண்ணுரு (Terracotta) சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.