தருவதில்லை.
29
ஆகையினால்
தொன்ம விளக்கக்
இடம் கலைஞர்கள் மிகவும் கவனமாகவே தொகுத்துத் தரவேண்டியதாகிறது.
முன் செய்திகளைத்
இறைவணக்கக் கூறுகளும் இத்தகைய கலைகளில் இடம் பெறும். இருப்பினும் தொன்ம விளக்கமே இவற்றில் பெரு நோக்காக இருப்பதினால் இத்தகைய கலைகள் தனிப் பிரிவாக அமைக்கப் படுகின்றன. பலவிதமான இயற்கை இகந்த நிகழ்ச்சி கள் தனிப் பிரிவாக அமைக்கப் படுகின்றன. பலவிதமான இந்த நிகழ்ச்சிகள் இக்கலைகள் மூலம் விளக்கப்படும் மக்கள் அவற்றை எக்காரணம் பற்றியும் ஒதுக்குவதில்லை, மாறாக அவற்றை நம்பி ஏற்றுக் கொள்கின்றனர். கலை நிகழ்ச்சிகளில் அவை விளக்கம் பெற்று பாமர மக்களை மிகச் சிறப்பாகக் கவர்கின்றன. வியப்புறு செயல்களாக மதித்துப் பாராட்டு கின்றனர். கலைச் செய்திகளைப் பற்றி அறிவு ஆராய்ச்சி செய்யாது கலையுணர்வுடன் விரும்பி ஏற்று மகிழும் பொதுத் தன்மையை நாட்டுப் புற மக்களிடம் பரவலாகக் காண முடிகிறது. ஆய்வுக்கு இடமளிக்காத அசையா நம்பிக்கையுடன் நாட்டுப் புறக் கலைகளை மக்கள் அநுபவித்து இன்பம் காண் கிறார்கள்.
முன் வரலாற்றை அறியும் ஆவலும், பெரும் நம்பிக்கையும் இறை வரலாற்றைப் புனிதமாகக் கருதும் பண்பும், இசைப் பற்றும், எளிமையான கலைகளைப் பெருமையாக ஏற்றுக் கொள்ளும் இயல்பும், நுட்பமான ஆய்வுக்கு இடம் கொடாத. தன்மையும் நாட்டுப் புற மக்களிடம் அதிகம் இருப்பதினால்' தொன்ம வரலாற்றுக் கலைகள் அன்று போல இன்றும். மக்களிடம் நலம் சிறக்க வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
பழமையான
ன்ம
புதுமையை அவர்கள் ஒதுக்குவதில்லை. முறைகளைக் கலைஞர் கையாண்டு இத்தகைய விளக்கங்களைத் தந்தாலும் மக்கள் அவற்றை மறுத்து ஒதுக்குவது இல்லை. பழங்கதைக்குப் பங்கு ஏற்படாது கலைஞர் நன்கு பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் தேவையாக உள்ளது. இறைவன் மனிதனுக்கு மேற்பட்டவன் என்ற
நம்பிக்கை மக்களுக்கு இருப்பதினால் விளக்கத்தில் காணப்படும் மீவியல்பு செய்திகள் கதைகளில் காணப் பெறுவது போன்று மக்களால் மிகவும் சிறப்புடன் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. இத்தகைய தொன்ம விளக்கக் கதைகள் தமிழ் நாட்டில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.