உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

பலவிதமான கட்டுப்பாடுகளுடன் இவை நடத்தப் படுகின்றன. மந்திர விதிகள் கடுமையாகத் தோன்றும். இத்தகைய கலைகள் மனிதனுக்கு அச்சவுணர்வைப் பெருக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன.

தொன்ம விளக்கக் கலைகள்

னடப்புகளை

தொன்மம் என்பது பழமையைக் குறிப்பது. முன் விளக்கும் தரமான கலைகளைத் தொன்ம விளக்கக் கலைகளாகக் குறிப்பிடலாம். நாட்டுப் புற மக்கள் பல தெய்வங்களை வணங்கும் பழக்கம் கொண்டவர்கள். ஒவ் வொரு தெய்வத்துக்கும் தனித் தனி கதைகள் இருக்கும். முன்னோர் வணக்கமும் பல இன மக்களிடம் காணப்படுகிறது. அவர்களுக்காக நடத்தப்படும் விழாக்களில் முன்னோர் வரலாறு விளக்கப் படுவதைப் பின்னோர் மிகவும் விரும்பினர். இவை தவிர நாட்டில் பரவலாக வழங்கப்படும் இதிகாச நிகழ்ச்சி களையும் கலைகள் வாயிலாக அறிய மக்கள் விரும்பினர். இத்தகைய தொன்ம விளக்கங்கள் பெரும்பாலும் ஆடல் பாடல் முதலிய கலைகளின் மூலம் மக்களுக்குத் தரப்படுகின்றன.

இத்தகைய தொன்ம விளக்கச் செய்திகளை மக்கள் பல முறை பல வழிகளில் அறிவதால் அவை அவர்களுக்கு நன்கு பழக்கப்பட்டவைகளாகவே இருக்கும். இருப்பினும் அவற்றை மேலும் மேலும் கேட்டு இன்புற நாட்டுப்புற மக்கள் அலுப் படைவதே இல்லை. பலவிதமான கலைகளை உருவாக்கி அவற்றின் வாயிலாக வேறு வேறு முறைகளில் தாங்கள் நன்கு தெரிந்த பழங்கதைகளைப் புதிய அமைப்பாகக் கண்டு களிக்க மக்கள் ஆவல் படுகின்றனர். இதற்காக எத்தனையோ கலைகள் தமிழ் மக்களிடம் உள்ளன, அவற்றில் உயிர்ப்பும் துடிப்பும் மிகுதியாகக் காணப்படும்.

கலைஞர்கள் பலவிதமான புதிய உத்திகளைக் கையாண்டு தொன்ம விளக்கம் செய்கின்றனர். அத்தகைய புதுமைகள் மக்களால் மிகவும் சிறப்பாகப் பாராட்டப்படுகின்றன. தெரிந்ததைப் புதுமையாகப் பெறுவதில் நாட்டுப்புற மக்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி அளவிட்டுக் கூற இயலாது. அவர்கள் பழமை விரும்பிகள் என்றாலும் புதுமைப் பொலிவை வெறுக் காதவர்கள் என்பதை இதன் வாயிலாக நன்கு அறியலாம். புதுமை என்ற பெயரில் பழமைச் செய்திகள் சிறிது மாறுபட் டாலும் அவற்றை ஒப்புக்கொள்ள மக்களின் மனம் சிறிதும்