உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




27

அவற்றிலிருக்கும் கலைத் தன்மையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இறையீட்டுபாட்டுடன் அந்த ஆடல் பாடல்- களிலுள்ள கலைத்திறன் மக்களின் இன்பத்துக்கு வழிகாட்டியாக அமைவதோடு மட்டுமல்லாமல் கலை உணர்வுக்கு நல்ல விருந் தாகவும் அமைகிறது. ஆகையினால் தெய்வமேறலைக் கலை களில் அடக்கி விளக்கம் கூறுவது தவறாகப் படவில்லை.

நோயகற்றல

மனிதனுக்கு நோய் தோன்றுவது இயல்பு. அது உடல் பிணி யாகவும் மன நோயாகவும் இருக்கலாம். நோயற்ற வாழ்வையே மனிதன் விரும்புகிறான். ஆனால் நோய் பலசமயம் அவனை வாட்டி வதைக்கிறது. நோய் ஏன் ஏற்படுகிறது என்பதை அவனால் சரியாக அறிய முடியாத காலம் இறையின் தூண்டு தலால் தான் நோயுற்று வருந்துவதாக நினைக்கிறான். இறை வணக்கத்தினால் அத்தகைய அவதியிலிருந்து தப்புவதற்கு வழி பிறக்கும் என்று நம்புகிறான் ஆகையினால் கடவுளின் கோபத்தைத் தணித்துத் தன் நோயைத் தீர்க்க வேண்டுதல் செய்கிறான். வேண்டுதல் சில கலைகள் மூலம் செய்யப்படுகிறது.

பெரும்பாலும் தொத்து நோய்கள். பேய் பிடித்தல் ஆகிய வற்றிற்கே அவன் அதிகம் அஞ்சி நடுங்குகிறான். தன்னுடைய மருத்துவ ஆற்றலுக்கு அப்பால்பட்டதாக அவற்றைக் கருதி இறையுதவியை நாடித்துடித்துப் பணிகிறான். தொத்துநோயான வைசூரிக்கு 'அம்மை விளையாட்டு' என்றே பெயர் கொடுத் துள்ளான் அம்மன்சாமி கோபம் கொண்டு தன் உடலில் தீய விதைகளை விதைத்து வதைப்பதாக நம்புகிறான். இறந்தவர் களுடைய ஆவியானது அமைதியடையாது உயிருடன் இருப்பவர் களைத் தீங்கு செய்யும் ஆற்றலுடையது என்று கருதுகிறான். அத்தகைய தீய ஆவிகளின் பிடியை விலக்குவதற்குப் பலவித மந்திர தந்திரங்களை கையாள்கிறான். அவை கலையாக உரு. வாகியுள்ளன.

இத்தகைய நோயகற்றும் கலைகளை இரு கூறாகப்பிரித்துக் காணலாம். ஒன்று நோய் வராது தடுக்கும் கலைகள்; இன்னொன்று நோயுற்ற பின் அவற்றை மாற்றுவதற்காக. நிகழ்த்தப்படும் கலைகள். இரண்டுக்கும் மனிதனின் நோய் பற்றிய அச்சமே காரணமாக உள்ளது. இக்கலைகள் மறை வாகவே பெரும்பாலும் நடத்தப் படுகின்றன. குறிப்பிட்ட பயிற்சியுடையவர்களே இவற்றை நடத்த உரிமையுடையவர்கள்.