67
களைப் புரியாமல் தான் தோன்றித்தனமாக எதிர்த்தவர்கள் தப்பவே முடியாது. 'சாவடி' என்பது அவர்கள் எதற்கும் முடியாத நிலையில் கடைசியாகப் பயன்படுத்தும்
யாகும்.
அடிமுறை
தேவையான கலையானாலும் பண்புடையவர்களே பயில வேண்டிய கலையாக உள்ளது. மனிதவுணர்வு இல்லாத முன் கோபக்காரர் இக்கலையைப் பயிலவே கூடாது. என்று ஆசான்களே கூறுவர். அவர்களுக்கு எல்லா அடவு முறை களையும் பயிற்றுவிப்பதும் இல்லை.
விழாக்களில் சிலம்பாட்டம் வைத்து அதனை மக்கள் கண்டு களிப்பர். ஒருவருடைய தலையிலோ நெற்றியிலோ ஒரு வாழைக்காயை வைத்து ஒரு வாளால் இரண்டு துண்டாக வெட்டிக் காட்டுவது உண்டு. காயை வைத்திருப்பவருக்கு ஒரு சிறிதும் காயம் படாது. சுருட்டுவாள் வீசுதலும் அதில் ஒரு பகுதியாக நடைபெறும் பயிற்சியும் தேர்ச்சியும் உடையவர்கள் மாத்திரமே மக்கள் முன்னர் கம்பெடுத்து ஆட வருவர். சிறிது தவறினாலும் வரும் ஆபத்தோ மிகப் பெரிதாக இருக்கும். அஞ்சாமை, வீரம், நுட்பம், துரிதம், கவனம் ஆகிய தன்மை யுடையவர்களே தேர்ந்த சிலம்பக் கலைஞர்களாக வெளிவர முடியும். தமிழரின் உண்மையான வீரத்துக்கும் நுட்பமான செயல் திறனுக்கும் வியக்கத் தகும் போராற்றலுக்கும் எடுத்துக் காட்டாகச் சிலம்பக் கலை விளங்குகிறது.
மஞ்சு வீரட்டு அல்லது சல்லுக் கட்டு
தமிழ் மக்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஏறு தழுவு தலைக் கூறலாம். பழக்காது வளர்த்த முரட்டுக்காளையைப் பிடித்து ஓர் ஆண்மகன் அடக்குவதே இந்தக் கலையாகவும் விளையாட்டாகவும் கருதலாம். காளைகளைப் பிடிப்பதற்குச் சில தந்திர உத்திகளைப் பயன் படுத்துகின்றனர். வீரமும் உடற் பலமும் இல்லாதவர் இதில் கலந்து கொள்ள முடியவே முடியாது. ஏறு தழுவல் பண்டைக் காலத்தில் இருந்து இன்று வரைத் தமிழ் நாட்டில் பழக்கத்தில் உள்ளது. முல்லைக் கலியில் இது பற்றிய குறிப்பு இருப்பதினால் சங்க காலத் தமிழரின் பழக்கம் நமக்குத் தெரிய வருகிறது. இப்பொழுது நாட்டுப் புறங்களிலுள்ள ஆலய விழாக்களின் போது இத்தகைய நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும் இது சில இடங்களில் நடை பெறுகிறது. இப்பொழுது இதனை மஞ்சு அல்லது சல்லிக் கட்டு என்று கூறுவர்.