உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




107

வத்துக்குத் தெய்வமும் ஆட்டத்தில் மாற்றமுள்ளது. அவற்றில் முக்கியமானவற்றைத் தனித்தனியாகப் பிரித்துக் காண்பது நாட்டுப்புறக் கலைத்தன்மை நன்கு அறியத்துணை செய்யும்.

முக்கிய தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும்

கணக்

நாட்டுப்புற மக்கள் வழிபடும் தெய்வங்களைக் கெடுப்பது மிகமிகக் கடினம். தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான தெய்வங்கள் வணங்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஊருக்கு ஊர் தெய்வங்களின் பெயர்கள் மாறுகின்றன. சிறுசிறு மாற்றங் களுடன் கதைகள் கூறப்படுகின்றன. புதிது புதிதாகத் தெய்வங்கள் தோன்றுகின்றன. பல காலத்தால் மறக்கப்பட்டு வழிபாடிழந்து நினைவுச் சின்னங்களாக நிற்கின்றன. நெடுங் காலமாக நிலைத்து வழிபாடு பெறும் தெய்வங்கள் சிலவாகவே உள்ளன. ஒரு இடத்தில் சிறப்பிக்கப்படுவது அடுத்த இடத்தில் குறைத்து மதிப்பிடப்படுகிறது. தெய்வங்களுக்குள்ளும் ஏற்றத் தாழ்வு கற்பிக்கப்படுவதைக் காணலாம். குல தெய்வங்களும் உள்ளன. பொது தெய்வங்களும் விளங்குகின்றன. உறவு முறை விளக்கப்படும். தெய்வங்களும் மிகுதியாகக் காணப்பெறு கின்றன. அச்சம் தருபவை, அருள் செய்பவை என்ற நிலை களிலும் தெய்வங்கள் உள்ளன. சிலவற்றைக் கொடுமை செய் யாது தடுக்கவும் சிலவற்றை அருள்பாவித்துக் காக்கவும் மக்கள் தோன்றுகிறது. வழிபடுவதாகத் தெய்வங்களில் ஆ ண்கள்; பெண்கள், பூதங்கள், பேய்கள் போன்றவையும் காணப்படு கின்றன. தொன்மக் கதை மாந்தர், குறிப்பிட்டுக் கருதத் தக்கவாறு இறந்தோர், முன்னோர், அச்சவுணர்வில் கற்பிக்கப் பட்டோர் ஆகிய பல நிலைகளில் நாட்டுப்புறத் தெய்வங்களைப்

பிரிக்காலம்.

சேலம், கோவை, பெரியார், தர்மபுரி ஆகிய மாவட்டங் களில் ஐயனார், முனியாரப்பன், கருப்பனார்,வேட்டைராயன், கிருஷ்ணரப்பன், காளியாத்தாள், பிடாரி, பத்திரகாளி, திரௌபதியம்மன், வீரமாத்தி, சாமுண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள் முக்கியமானவை. கர்நாடக நாட்டுக்கு உரிய சாமுண்டேஸ்வரி இம்மாவட்டங்கள் அதை அடுத்து இருப்ப தினால் இங்கு வணங்கப் பெறுகிறாள். தெய்வ பரிமாற்றம் இடத்துக்கு இடம் ஏற்பட்டுள்ளதை இதனால் அறியலாம். சேலத்திலுள்ள அயோத்தியா பட்டினம் என்ற ஊரில் தெய்வ மேறிப் பலிகொடுக்கும் விலங்குகளின் குருதியைக் குடிக்கும்