உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

பழக்கம் உள்ளது. இத்தகைய பழக்கம் நெல்லை, குமரி ஆகிய றாவட்டங்களில் சுடலைமாடன், இயக்கி ஆகிய தெய்வ ஆடல் களிலும் உண்டு. சேலத்திலுள்ள ஆதனூர் அம்மன் எருமைப் பலி ஏற்பது வழக்கம். கண்ணியாம் பட்டியில் பெரியாண்டவர் என்ற தெய்வம் ஆடிக் குறி சொல்வதைக் காணலாம்.

கள்

தென்னார்க்காடு, வடஆர்க்காடு, செங்கல்பட்டு முதலிய வட மாவட்டங்களில் அங்காளம்மன், ரேணுகாதேவி, காளியம்மன், திரௌபதியம்மன், மாரியம்மன், பாவாடைராயன், கூத்தாண்ட வர், முனீஸ்வரன், கருமாரியம்மன், நாகம்மன் முதலிய தெய்வங் வணங்கப் படுகின்றன. அங்காளம்மன் 'சாமியாடி' அலகிட்டு கையில் வாளைவைத்து ஆடுவதைக் காணலாம். நோயைப் போக்கும் ஆற்றலுடைய தெய்வமாக அதைக் கருதி மக்கள் வழி படுகின்றனர். நோயுற்றவர் வயிற்றில் கையிலிருக் கும் வாளைச் செருகியதும் நோய்த் தணிந்து விடுவதாக மக்கள் நம்புகின்றனர். இந்த வழக்கம் தென்னார்க்காட்டிலுள்ள குறிஞ்சிப்பாடி ஊரில் இன்றும் நடைபெறுவதாக முடிகிறது. சாமியாடிக் கொண்டு தெருவலம் வரும் போது மக்களுக்கு மஞ்சள் கொடுக்கும் பழக்கமும் உள்ளது. குறிஞ்சிப் பாடியிலுள்ளது புற்று மாரியம்மன் கோயிலில் ஆடுபவர் செடல் குத்திக் கொள்வர். அவர்கள் விரதமிருந்து வேப்பிலை மஞ்சள் துணி ஆகியவற்றைக் கட்டிக் கொண்டு ஆடுவர்.

அறிய

கிளியானூர், தைலாபுரம், கொத்தட்யை, திருப்பாதிரிப் புலியூர் போன்ற ஊர்களில் அரவான் அல்லது கூத்தாண்டவர் வணக்கம் மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. அங்கு நடக்கும் தாலியறுப்பு நிகழ்ச்சி முன்பே விளக்கப் பட்டுள்ளது. திண்டி வனத்துக்கு அருகிலுள்ள இறையானூர் காளிகோயிலில் பௌர்ணமி நாட்களில் இறையருள் கொண்டு ஆடிக் குறிசொல்லும் வழக்கம் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தி லுள்ள சோத்துப் பாக்கத்தில் அமாவசை நாட்களில் குறி சொல் கின்றனர். இறையேறி ஆடுபவர் இரும்பு ஆணிகள் அடிக்கப் பட்ட ஒரு பலகையின் மீது ஏறி நின்று ஆவேசமாகக் குறிசொல் வதை மக்கள் வியப்புடன் பார்த்து அச்சத்தோடு கேட்பார்கள். குமரி மாவட்டம் ஒற்றைத் தென்னம் பிள்ளைத் தட்டு ஊரில் அவ்வாறு குறி சொல்லுபவர் ஆணியடிக்கப்பட்ட கட்டைச் செருப்பை அணிந்திருப்பதைக் காணலாம். மற்றும் பூசைப்புரை விளை, குண்டல், ஈசான்தெங்கு, பெத்த பெருமாள் குடியிருப்பு முதலிய ஊர்களிலும் இறையருள் பெற்றுக் குறிசொல்லும் பழக்கம் உள்ளது.

சில சமயம் வீடுகளிலும் சிலர் தெய்வமேறி