109
வட
ஆடுவதையும் குறி சொல்வதையும் காண முடிகிறது. ஆர்க்காடைச் சேர்ந்த சோளிங்கரி லு ள்ள கருமாரியம்மன் கோயிலில் வேப்பிலையை ஆட்டியவாறு மந்திரம் சொல்லுதலும் குறி சொல்லுதலும் வழக்கமாக உள்ளன.
வேலூரிலுள்ள முனீஸ்வரன் கோயிலில் ஆண்களும் பெண் களும் சேர்ந்து ஆடுவர். ஆடு கோழிகளைப் பலியிட்டு மரத்தடி யிலிருக்கும் தெய்வப்பீடங்களில் அவற்றின் குருதியை திருப் பாதிரிப்புதூர் நாகம்மன் திருவிழாவில் செடல் குத்திக் கொண்டு ஆடுவார்கள். ஆடு மாடு கோழி ஆகியவை நோயுற்றால் அவற்றுக்கும் செடல் குத்தி கோயிலைச் சுற்றிக் கொண்டு வருவர். மனிதர் நோயுற்றால் கோயிலுக்கு வேண்டுதல் செய்வர். நோய் தீர்ந்தபின் அவரைப் பச்சை ஓலைப் பாடையில் ஏற்றி கோயிலைச் சுற்றி இழுத்து வந்து செடல் குத்தி வேண்டுதலை நிறைவேற்றுவர்.
"
பேய் பிடித்தவர்களையும் கோயிலுக்குக் கொண்டு வந்து தீய ஆவிகளை ஓட்டும் வழக்கமும் பல இடங்களில் உள்ளது. தெய்வமேறி ஆடுபவர் பேய் பிடித்துள்ளவர்களைப் பிரம்பினால் அல்லது வேப்பிலையால் நோவும்படி அடித்து வதைப்பர். பின்னர் மந்திரங்களைக் கூறுவார். குமரி மாவட்டத்திலுள்ள ராசாவூரில் இருக்கும் கிருஸ்தவ ஆலயத்தில் இவ்வாறு பேயோட்டும் செயல் இன்றும் நடந்து வருகிறது. பேய் பிடித்த வர்கள் பலவாறு ஆடியும் பேசியும் திரிவர். அவர்களைப் பல வழிகளில் முயன்று குணமடையச் செய்கிறார்கள். நெல்லை மாவட்டம் ஏரலில் இருக்கும் சேர்மன் அருணாசலசாமி கோயிலி லும் பேய் விரட்டல், குறி சொல்லல், நோய் தீர்த்தல் ஆகியவை செய்யப்படுகிறது. அங்குள்ள மண்ணை எடுத்துச் சென்று புனிதமாகக் கருத குணமடைவதாகக் கருதுகின்றனர். அங்கு நடைபெறும் ஆஞ்சநேயர் ஆட்டம் ஆற்றலும் வேகமும் உடையது. ஆட்டம் இன்றியும் நோயைப் போக்கும் மந்திர வழியை மக்கள் செய்வதை வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள பெண்ணாத்தூரில் காணலாம். இதற்குப் 'பச்சைபோடுதல்' என்று பெயர் சொல்கிறார்கள். நண்பகலில் ஓர் அலரிச்செடி அல்லது வேப்பமரத்தடியில் நின்று எலுமிச்சைப் பழத்தை நசுக்கித் துண்டுபடுத்தி நாலாபக்கமும் வீசி எறிவர். இதனால் நோய் தீர்ந்து விடுமென நம்பி இன்று செய்கின்றனர். இவை அனைத்தும் ஒரு மந்திரவாதியின் கருத்துக்கும் வழிமுறைக்கும் ஏற்றவாறே செய்யப்பெறும்.
எ