111
விளையாட்டில் ஈடுபடுவர். சந்திலாபுரம் செல்லாண்டியம்மன் விழாவும் இவ்விதமே கலைச் சிறப்புடன் நடக்கும். தெய்வங் களின் பெயர்கள் ஊருக்கு ஊர் மாற்றமுடன் காணப்பட்டாலும் நடைமுறை வழக்கங்கள் ஒன்று படுவதினால் அத்தெய்வங்கள் ஒரே அடிப்படைத் தோற்றங்களாக இருக்குமோ என்ற சிந்தனை எழுகின்றது
வட ஆர்க்காடு
மாவட்டத்தைச் சேர்ந்த ரகுநாத சமுத்திரம் உரிலுள்ள மாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் நடைபெறும் விழாவைக் கூழ்வார்த்தல் விழா என்று சிறப்பாகக் கூறுவார்கள். இறையருள் கூடியாடுபவர் மூன்று நாட்களாகக் காப்புக் கட்டி நோன்பு இருப்பர்.மாரி அம்மன் கரகம், பொன்னியம்மன் கரகம், புறடையார் கரகம் என்று மூன்று கரகம் என்று மூன்று கரகங்களை எடுத்து ஊர்ச் சுற்றி வருவார்கள். தலைத் தெய்வம், புறத்தெய்வம், எல்லைத் தெய்வம் என மூன்று வகையில் பூசனைகள் நடைபெறும். தெய்வங்களின் தகுதியும் பணியும் வேறுவேறாகக் கருதப் படுகிறது. சல்லடை விளக்கெடுத்து வழிபடும் வழக்கம் அங்கு உள்ளது. உருண்டவாறு பலர் 'அங்கப் பிராணம் (தெருச் சுற்றல்) செய்வதைப் பார்க்கலாம். உடுக்கை, பம்பை முதலிய பலவிதக கருவிகளை அடித்து முழக்கி இறையருளை ஒரு மனிதன் மேல் வரச் செய்வதை 'வன்னித்தல்' என்று கூறுகிறார்கள்
நண்பகலில் கூழ வார்த்து அனைவருக்கும் கொடுப்பார்கள். முன்னிரவில் கரக ஊர்வலமும் அதன் பின்னர் பாரதக்கதை தொடர்பான கூத்தும் நடைபெற்று விழா இனிது முடிவுறும்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் வட பகுதியில் கொப்புடை யம்மன் வழிபாடு மிகச் சிறப்பாகவும் பெரும் நம்பிக்கையுடனும் நடக்கின்றது. கோனாபட்டில் நடைபெறும் விழா மிகவும் முக்கியமானது. ஆத்தங்குடி அந்தரநாச்சியம்மன், நெடுமரம் மலையரசி, குளத்துப்பட்டி பொன்னழகி, பலாவான்குடி செங்கமலத்தம்மன், வைரவன் பட்டி பூமலைச்சியம்மன், வேலங்குடி பெரிய நாயகியம்மன், பள்ளத்தூர் வயல் நாச்சி யம்மன் ஆகிய பெண் தெய்வங்கள் முக்கியமானவை அக்காள் தங்கையராக எழுவர் இருந்து அவர்கள் இறந்து ஏழு பெட்டி களில் ஆற்றோடு மிதந்து வந்ததாகக் கதை கூறுவர். பெட்டிகள்
வைத்த இடங்கள் ஏழு ழு சமாதி மேடுகளாக இருப்பதைக்
காணலாம்.