125
அடிப்பதும் வெட்டுவதையும் காணலாம். பலவிதமான நோய் களைக் குணப்படுத்தல், பேயோட்டுதல் ஆகியவற்றை மத்திர ஆற்றலினர் செய்து காட்டுவர்.
யத் தெய்வ ஆடல்கள் (Mystic Dance)
மாயத் தன்மையுடைய ஆடல்கள் கடுமையானதாக இருக்கும். நோயகற்றும் மாயத்தையும் இத்தகைய ஆடலர் செய்வதாக மக்கள் நம்புகின்றனர். கொட்டு மேளம் முழங்க இவர்கள் சுற்றிச் சுழன்று உருண்டு புரண்டு ஆடுவர். மந்திர ஆற்றலினரின் ஆடல் போன்றே இருக்கும். தெய்வமேறியிருப்ப தாகவே மக்கள் கருதுவர். இத்தகையோர் சைபீரியாவில் போலியாக வலித்து வலித்து ஆடுகிறார்கள். இதனைச் சைபீரியாவிலும் கில்பர்ட் தீவுகளிலும் எபிலெப்டிக் ஆடல்கள் (Epileptic Dance) என்று கூறுகின்றனர். அங்கோகாக் (Angakok) என்ற ஆடலை ஆடி இவ்வாறு செய் கின்றனர். பாலியில் நடக்கும் சங்குயாங் ஆடலும் (Sanghyang) அல்ஜீரியாவில் நடைபெறும் ஐஸவ்வா (Aissaoua) ஆடல்களும் இவ்வகைலயச் சேர்ந்தவை. ஆப்பிரிக்க நாடான கோல்ட் கோஸ்டில் (Gold coast) மடியூப் (M'Deup) ஆடல்கள் மாயத் தன்மையுடையதாகவே காணப்படுகிறது.
எஸ்கிமோக்கள்
தமிழ் நாட்டைப் போன்று உலகிலுள்ள பல இடங்களில் மாயத் தெய்வ ஆடல்கள் நடைபெறுவதைப் பார்த்து சில உண்மைகளை அறிய வேண்டும். எந்த இடத்தில் வாழ்ந்தாலும் நாட்டுப்புற மக்கள் எதையும் எளிதில் நம்பிவிடக் கூடியவர் களாகக் காணப்படுகின்றனர். அவர்களுடைய அச்சவுணர்வே இதற்குக் காரணமாக உள்ளது. மனிதன் மந்திர வேலைகளையும் மாயச் செயல்களையும் செய்யும் ஆற்றலை நம்பியதுடன் பல வியப்பான செயல்களைச் செய்வதிலும் வல்லவர்கள் என்று கருதுகின்றனர்.
மாயத் தன்மையுடன் ஆடுவோர்கள் தங்களுக்கும் சில ஆவி களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றனர். இறை யாற்றலைப் பெறும் திறமை உள்ளதாக நடிக்கின்றனர். தங்களுடைய உடலில் வேற்று ஆவி புகுந்து தங்களுக்கு ஆற்றலைத் தந்து வியப்பான செயல்களைச் செய்வதாக மக்களை நம்ப வைக்கின்றனர். பண்டைக் காலத்தில் கிரேக்கர் சிலர் ஆர்கியா (Orgia) என்ற தெய்வ ஆற்றல் தங்களிடம்