124
கோயிலுக்குச் சென்று வழிபடுவர். இம்முறையான வணக்கம் கூத்துக்குத் துணைபுரியும் தன்மையை நன்றாகப் புரிந்து
கொள்ளலாம்.
குமரி மாவட்டத்தில் ஊருக்கு ஊர் நடக்கும் சுடலைமாடன் வணக்கத்தைக் காணலாம். தெய்வப் பீடத்தில் மலரும், பல் வகைப் பொருளும் படைக்கப்படும். சுடலைமாடன் கதையை வில்லில் அடித்துப்பாடுவர். பொங்கல் பானைக்கு நெருப்பு வைப்பர். கதை ஒரு உச்சகட்டத்தை எட்டியதும் கொட்டு மேளம் முழங்கப்படும். ஒருவர்மேல் தெய்வமேறி ஆட்டம் தொடங்கும். பீடத்திலிருக்கும் ஆயுதங்கள், மலர்மாலைகளை எடுத்துக்கொண்டு. ஆடுவர். ஆட்டம் ஒரே குறிப்பாகவும் ஊழையிடுவதாகவும் தோன்றும். தீப்பந்தம் பிடிப்பர். அவை வியப்பாக இருக்கும். ஆனால் கதை நிகழ்ச்சிகள் ஆடல் மூலம் விளக்கப் படுவதே இல்லை. வில்லுப் பாட்டில் கேட்கும் விளக்கத்தால் புரிந்து கொள்ளவேண்டும். பல தெய்வங்களின் ஆடல்கள் இவ்வாறுதான் நடைபெறும்.
வடமாவட்டங்கள் தென்மாவட்டங்கள் ஆகியவற்றில் நடை பெறும் விழாநிகழ்க்சிகளை இந்த விளக்கங்கள் மூலம் நன்கு அறியலாம். கலைக்கு அவை எந்த அளவுக்கு உதவியிருக்கும் என்பதைச் சிந்தித்து உணரலாம். இவற்றைக்கொண்டு வடக்கில் கூத்துக்கலை வளர்ச்சிக்கும் தெற்கில் வில்லுப்பாட்டுக் கலை வளர்ச்சிக்கும் உரிய காரணங்களை நன்கு அறியலாம். ஒரே விதமான பண்பாடும் பழக்க வழக்கமும் உடைய தமிழ் நாட்டில் ஏன் இப்படியொரு வேறுபாடு உள்ளது என்பதைப் பற்றிச் சிந்திப்பது நலம். வடக்கில் உள்ள தெய்வக் களுக்கும் தெற்கிலுள்ள கதைகளுக்கும் உள்ள பாட்டை அறிய வேண்டும். பிற பண்பாட்டுக் கலப்பு வடக்கே ஏற்படுவது போன்று பல காரணங்களைக் கருத்தாகக் கண்டு பொருத்தமான ஒரு முடிவுக்கு வருவது நலம்
மந்திரத் தன்மையுடைய
ஆடல்கள்
கதை
வேறு
மந்திர ஆற்றலுடன் தெய்வமேறி ஆடுவதாகப் பலர் ஆடு வதைக் காணலாம். அவர்களும் மனிதன் சாதாரண நிலையில் செய்ய இயலாத செயல்களை அனைவரும் வியப்புறுமாறு காட்டுவதைப் பார்க்கலாம். தங்களைத் தாங்களே
செய்து