உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பட்டுள்ளன.

123

வட்டாரச் சார்புடையவை இசையாகிப் பின் எழுத்தாகி ஏடேறியுள்ளன. இன்னும் மேடையேறவில்லை.

வட மாவட்டங்களில் நடைபெறும் தெய்வமேறிய ஆடல் களில் நெருப்பைக் கையால் வாரி எடுப்பது போன்ற அரிய செயல்களுடன் கதை நிகழ்ச்சிகளைக் கலையாக நடித்துக் காட்டும் போக்கும் இருந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டிக் குப்பத்தில் நடக்கும் திரௌபதியம்மன் திருவிழா நிகழ்ச்சிகளைக் காணலாம். அங்கு விவசாயிகளுக்கு ஓய்வான சித்திரை வைகாசி மாசங்களில் திருவிழா நடக்கும். அமாவாசை நாளில் கொடியேற்றி 18 நாட்கள் பாரதம் வாசிப்பார்கள். இரண்டு மணிமுதல் ஆறுவரை இது தினமும் நடக்கும். இறுதி 8 நாட்கள் பாரதக் கதையிலுள்ள முக்கியமான நிகழ்ச்சிகள் கூத்தாக நடத்தப்படும். இறுதி நாளில் பாண்டவர்கள் ஒரு பக்கமும் துரியோதனன் ஒரு பக்கமுமாக ஒரு கயிற்றுக்கு இரு பக்கங்களிலிருந்து சண்டையிடுவர். கண்ணன் திரௌபதை ஆகிய தெய்வங்கள் அங்கு இருப்பர். சண்டை ஊரில் பரந்து நடைபெறும்.

மாலை

சுமார் 40 அடி நீளத்தில் ஒரு துரியோதனன் உருவம் செய்யப் பட்டிருக்கும். கண்ணன் பீமனிடம் சைகை மூலம் துரியோதன னின் உயிர்மூலமான தொடையில் கதாயுதத்தால் அடிக்கச் சொல்வார். உடனே உருவத்தின் தொடையில் ஓங்கி பீமன் அடிப்பான். அது முறிந்துவிழும். அதிலிருந்து குருதி குபுகுபு வென்று கொட்டும். மக்கள் தீயவன் மடிந்தான் என்ற மகிழ்ச்சி யில் ஆரவாரம் செய்து களிப்பர். இவ்வாறு குருதி கொட்டு வதற்காகத் தொடைக்குள் ஒரு மண்பானை வைத்து அதற்குள் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த சிவந்த நீரை நிறைத்திருப்பர். இக்காட்சியின் பொய்மையை அறிந்தும் அதை மறந்து மெய்ம் மையாக நினைப்பதே நாட்டுப்புற மக்களின் இயல்பான கலைத் தன்மை ஆகும். இது பகல் 11 மணிக்கு நடக்கும்.

பின்னர் திரௌபதி, கண்ணன் ஆகியோர் தெய்வம் ஏறிய நிலையில் நெருப்பு குண்டத்துக்கு வருவர். அங்குத் தெய்வச் சிலைகளும் இருக்கும். தீயது அழிந்ததை அறிவிக்க ஒருபிடி நெருப்புக் கங்குலைக் கையால் அள்ளித் திரௌபதியின் பட்டாடையில் கட்டுவர். கையும் கனிவதில்லை. பட்டும் எரிவதில்லை. கூத்தும் ஆடலும் முடிந்து அனைவரும்