உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

வடமாவட்டங்களுக்கும் தென்மாவட்டங்களுக்கும் இடையே வணக்க முறை, விழாவெடுக்கும் முறை ஆகியவற்றில் ஒருவகை யான வேறுபாடு : இருப்பதைக் காணலாம். வடக்கே தெய்வ வரலாற்றைக் கதையாகக் கூறிக் கூத்தாக நடித்து வந்துள்ளனர். தெற்கே அவற்றை வில்லுப்பாட்டாகப் பாடிக் கேட்டுள்ளனர். ஆகையினால் பார்த்து மகிழும் கூத்துக் கலை வடமாவட்டங் களில் சிறந்து வளர்ந்துள்ளது. தெற்கே கேட்டுச் சுவைக்கும் இசைக்கலை புகழ் பெற்றுச் செரித்துள்ளது. கூத்து நடக்காத நாட்டுப்புற விழாக்கள் வடக்கே நடப்பது இல்லை. அதுபோல் வில்லுப்பாட்டு இல்லாத விழாக்கள் தெற்கே நடப்பது இல்லை. குமரியும் நெல்லையும் வில்லுப்பாட்டுக் கலையை அன்றும் இன்றும் வளர்த்து வருகின்றன. மதுரையிலிருந்து வடக்கிலிருக் கும் மாவட்டங்கள் கூத்துக் கலலயைச் சிறப்பாக வளர்த்துள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் இரண்டையும் கண்டுகளிக்கும் பேறுடன் உள்ளது.

குமரி மாவட்டத்திலுள்ள அகத்தீசுவரம் அம்மன் கோயிலில் நடக்கும் கொடை விழாக்களில் தொடந்து கூத்துக்கள் முன் காலத்திலிருந்தே நடத்தப்படுகின்றன. ஆனால் வடக்கே எந்த ஊரிலும் வில்லுப்பாட்டு போன்ற இசைக்கலை நடந்ததாகத் தெரியவில்லை. வடஆர்க்காடு, செங்கல்பட்டு,தென்ஆர்க்காடு போன்ற மாவட்டங்களில் திரௌபதி அம்மன், அரவான் போன்ற பாரதக் கதைப் பாத்திரங்கள் வணக்கத் தெய்வங்களாக இருப்பதினால் பாரதக் கதையைப் படித்துக் கேட்டும், அதன் காட்சிகளை நடித்துக் கண்டும் மக்கள் வழிபாடு செய்துள்ளனர். ஆனால் நெல்லை, குமரி மாவட்டங்களில் அவற்றுக்குரிய வட்டாரத் தெய்வங்களை வணங்கி, அவர்களின் கதைகளை வில்லுப்பாட்டாகக் கேட்டு மகிழ்ந்துள்ளனர். குமரிமாவட்டத் தில் பாண்டவர்களை வணங்கும் வல்லவர் கோயில் ஒன்றே ஒன்று சொத்தவிளை ஊரில் உள்ளது. அதில் பாரதக்கதையை வில்லுப்பாட்டாகக் கேட்டுச் சுவைத்துள்ளனர். மற்றபடி அங்குள்ள நச்சுப் பொய்கை கோயிலிலும் பாரதக் கூத்து நடந்த தாகத் தெரியவில்லை. பரந்த வழக்குடைய பாரதம் போன்ற இதிகாசப் புராணக் கதைகளைக் கூத்தில் கண்டு களித்துள்ள நாட்டுப்புற மக்கள் சுருங்கிய வழக்குடைய வட்டாரத் தெய்வக் கதைகளைப் பாட்டாகக் கேட்டு மகிழ்ந்துள்ளனர். பாரதம் போன்ற கதைகளுக்கு நாடளாவிய சிறப்பும் சுடலைமாடன் போன்ற கதைகளுக்குத் தோன்றிய இடத்தில் மட்டிலுமுள்ள சிறப்பும் உள்ளன.

பரந்து வளர்ந்தவை இசையாலும் கூத்தா லும் சுவைக்கப் படுவதுடன் சிறந்த இலக்கியமாகவும் படைக்கப்