121
மைலாடி, அச்சன் குளம் ஆகிய ஊர்களில் கூட்டாகப் பலர் தெய்வமேறி ஆடுவது வழக்கமாக உள்ளது. சில கோயில்களில் ஒருவருக்கு மேல் இருவர் ஒரே சமயம் ஆடிவிட்டால் போட்டியும் பூசலும் ஏற்பட்டு விடுகிறது. கூட்டு ஆட்டத்தில் தெய்வ உறவு முறை தெளிவாக விளங்க ஆட்டம் நடைபெறும். அது திருத்தமுறாத நாடகக் காட்சியாகவே தோன்றும். இந்தத் தெய்வங்களைத் தவிர கருங்கிடாக்காரன், செங்கிடாக்காரன், ஓற்றை மாராப்பு, காவக்காரன் முதலிய காவல் தெய்வங்களும் உண்டு. அவர்களும் சில இடங்களில் மனிதர்கள் மேலேறி ஆடுவதைக் காணலாம். காலசாமி, காலகன்னி ஆகியவை ஆண் பெண் சாவுத் தெய்வங்கள். முன்னதன் ஆட்டம் கீழக் கிருஷ்ணன் புதூரிலும் பின்னதன் ஆட்டம் கோயில்விளை ஊரிலும் முன்பு நடைபெற்றதைக் காண வாய்ப்பு கிடைத்தது. வீடுகளில் கன்னித் தெய்வங்களும் காடுகளில் பேய்களும் படையல் பெறுகின்றன. கன்னியர் அமைதியாகவும் பேய்கள் ஆவேசமாகவும் ஆடுவதாகக் கூறுவர். பெரும்பாலும் கன்னித் தெய்வ ஆட்டம் நடப்பதில்லை. தெய்வமேறி ஆடுவதில் வியப்பும் உள்ளது. போலியும் உள்ளது. கதையுணர்வு சிறிது உள்ளது. கலையுணர்வு மிகக் குறைந்து உள்ளது.
தெய்வ ஆடலும் கலையும்
தெய்வ ஆடலில் கலையுணர்வு அதிகம் இல்லையாயினும் அவை கலைவளர்ச்சிக்குக் துணை நின்றன என்று கூறலாம். தெய்வவுணர்வுடன் மக்கள் தெய்வமேறியவர்களைக் காண் பதால் அவர்கள் வியப்புக்கு இடம் அதிகம் ஒதுக்கிக் கலை யுணர்வைக் கட்டுப்படுத்த வேண்டியதாகிறது. தெய்வக் கதை களைக் கலையாக நடித்துக் காட்டத் திறமையுடையவர்களுக்கு உணர்வை ஊட்டும் பங்கு ஓரளவு தெய்வ ஆடலுக்கு உண்டு. கூத்துக்கு அது வழி வகுத்திருக்கலாம். அத்தகைய கூத்துக்களை இறைப்பற்றுணர்வுடன் மக்கள் கண்டு களித்துள்ளனர்.
வியப்புறும் செயல்களைக் கலைத் தன்மையுடன் காட்டவும் தெய்வ ஆடல்கள் உதவி இருக்கவேண்டும். தெய்வமே தங்கள் முன் உருப்பெற்று வந்ததாகக் கருதும் வில்லுப்பாட்டுக் கலைஞர், மேளதாளமிடும் கலைஞர் ஆகியோர் தங்கள் முழுத் திறமையையும் காட்ட முயன்றிருப்பர். கதைக்கும் ஆடலுக்கும் தக்கவாறு கிறப்பாகத் தங்கள் கலைகளில் உணர்வைச் சிறப்பாக விளக்க விரும்பி இருப்பர்.
BIT-9