உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

இருப்பதாகக் கூறி அரசியலில் கூடத் தலையிட்டுப் பலவற்றைச் செய்துள்ளனர் மெக்சிக்கோவிலுள்ள அஸ்டெக் (Aztec) மக்களிடம் தெய்வமேறியாடும் பழக்கம் இருந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள செவ்விந்தியர் பேயோட்டி (Peyote) என்ற ஒருவகை வெறியாடலை ஆடுகின்றனர். இது மெக்சிக்கோ விலிருந்து வந்து இவர்களை ஒட்டிக்கொண்ட வழக்கம் என்று கூறப்படுகிறது. நியுயார்க்கிலும் தீய ஆவிகளை மாய ஆடல் களால் துரத்தும் வழக்கம் இருப்பதாக அறிய முடிகிறது. ஹெயிற்றி (Haiti) பிரேசில் (Brazil) ஆகிய இடங்களிலும் வோடன் வணக்கத்தில் (Vodun cult) தெய்வமேறி ஆடும் வழக்கம் உள்ளது. நைஜீரியா நாட்டில் யோருபாஸ் ( Yorubas) என்ற தெய்வ ஆடல் நடப்பதையும் அறியலாம். தீபத்திலும் ஸ்ரீலங்காவிலும் பேயோட்டம் நடக்கின்றன. ஜப்பானில் சூரிய தேவதையான அமதரசு (Amaterasu) என்ற தெய்வத்தை அழைப்பதற்காக யுமி - நோ யுத்சமி (ume - no - utsame) என்ற ஆடல் நடத்தப்படுவதாக அறியலாம்.

தமிழ் நாட்டைப் போன்று தெய்வமேறி ஆடலாகவே இவை தோன்றுகின்றன. இத்தகைய பழக்கமும் நம்பிக்கையும் உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருப்பது மக்களின் சிந்தனைப் போக்கும் செயல்பாடுகளும் நாட்டுப்புறத் தன்மையில் ஒத்து இருப்பதை மிகத் நெளிவாகக் காட்டுகிறது. பல நிலைகளில் தமிழ் மக்களின் போக்கு மெக்சிக்கோவில் வாழும் அஸ்டெக் மக்கள், தென் அமெரிக்காவில் பிரேஸில் நாட்டில் தென் பகுதியில் வாழும் மக்கள், ஆப்பிரிக்காவில் மேற்குப்பகுதி நாட்டு மக்கள் ஆகியோரிடம் பெரும் அளவில் இருப்பதைக் காணமுடிகிறது. இவற்றை இன்னும் தெளிவாக ஆராய்ந்தால் வியப்பான செய்திகள் வெளிபட வாய்ப்பு உள்ளது.