உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




157

நாட்டில் வாழ்வோரும் காட்டில் வாழ்வோரும் கலந்து உறவாடும் காட்சிகளைக் குறவஞ்சி நாடகம் கொண்டுள்ளது. வளமின்றி வாழ்வைத் தேடி அலையும் எளிய மக்களும் வளத்தி லிருந்து வாழ்வை நாடிக் கலங்கும் வசதியான மக்களும் நெருங்கிப் பழகும் காட்சிகளைப் புணைந்து காட்டுகிறது.

குறைந்த பாத்திரங்களைக் கொண்டு நிறைந்த கருத்துக் களைக் குறவஞ்சி நாடகம் மக்களுக்குத் தருகிறது. இன்பச் சுவையும் நகைச் சுவையும் மிகுதியாக விரவி எளிய மக்களை இனிமையாகக் கவர்ந்து விடுகின்றன. பல்வேறு காட்சிகள் நாடகத்துக்கு விறுவிறுப்பைக் கொடுப்பது உறுதி. னிமை யான பாடல்கள் இசையோடு வெளிவருவது கலைச் சிறப்பாக அமையும். பலவிதமான பாடலமைப்புகள் குறவஞ்சியில் இருப் பதைச் சிறப்பாகக் கருதவேண்டும். அவை அனைத்தும் எளிய மக்களால் விரும்பப்படும் நாட்டுப்புறப் பாடல் அமைப்புகள். பாம்பாட்டி, பறை, குரவை, அம்மானை, பந்து, கழங்காடல், பகடி, பகவதி, சாழல், உந்தி, அவலிடி, குணாலை ஆகிய வகைப் பாடல்கள் குறவஞ்சியில் பாடப்படுவதை நாட்டுப்புற மக்கள் நன்கு சுவைத்திருப்பர்.

சிற்றூர்களில் எளிமையாகவே வஞ்சி நாடகங்கள் நடத் தப்பட்டிருக்கவேண்டும். பின்னர் புலவர்களின் இலக்கிய புலமையால் அவை மெருகு ஏற்றப்பட்டிருக்கும். இன்பக் கலையாக முளைத்த குறவஞ்சி நாடகம் தத்துவக் களஞ்சியமாக மாற்றப்பட்டு இன்று இலக்கியக் கருவூலமாக விளங்குகிறது. வாழ்வின் அடிப்படையில் தோன்றி அறிவின் பிடியில் வளர்ந்து இலக்கிய வடிவில் நிலைத்து தமிழுக்கு ஆக்கமாக விளங்கும் குறவஞ்சி நாடகம் முன்பு நாட்டுப்புற மக்களை மகிழ்வித்த இசைக் கூத்துக் கலையே என்பது உண்மை.

நொண்டி நாடகம்

தமிழில் ஒரு தனித்த இயல்புடைய நாடக

னமாக

விளங்கும் நொண்டி நாடகம் முன்பு நாட்டுப்புற மக்களை மகிழ்வித்த மேடைக் கலைகளில் ஒன்றாகும். 17, 18ஆம் நூற்றாண்டுகளில் நொண்டி நாடகம் பல இடங்களில் ஆடப் பெற்றுள்ளது. இதில் ஒரு நொண்டியின் அவல் வாழ்வு அழகாகப் படம் பிடித்துக் காட்டப்படும். மக்கள் தவறு செய்யாது திருந்தி வாழவும் சமூகத்துடன் பொறுந்தி வாழவும்