உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

உரை : 12

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

திடீர் பிள்ளையார்

நாள் : 26.11.1970

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, திடீர் வினாயகரைப் பற்றி எப்போதும் இருக்கும் வினாயகர் அவர்கள் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து தன்னுடைய கருத்துக்களை எல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்

இந்தத் திடீர்ப் பிள்ளையாரைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு மூதறிஞர் ராஜாஜி அவர்கள் - மிகுந்த ஆழ்ந்த ஆஸ்திகப் பற்றும், அவர்கள் குறிப்பிட்டதுபோல் தெய்வீகப் பற்றும் கொண்ட ராஜாஜி அவர்கள் "இந்தப் பிள்ளையார்க் கதையின் மூலம் மதத்திற்குக் கேடு உண்டாக்க வேண்டாம்" என்றுதான் பிள்ளையார் சிலையைப் பற்றி அறிக்கை விடுத்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம் என்று - இன்று அல்ல, ஏற்கெனவே அறிவித்திருக்கிறோம். உங்கள் பக்கத்தில் இருக்கும்போதுகூட அந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன்.

இந்தப் பிள்ளயைார் விவகாரத்தில் தலைமையேற்றுப் பிரச்சினையைப் பெரியதாக ஆக்கிக்கொண்டிருக்கும் ஒரு பிரமுகர் இந்த வேலையை இப்போது மாத்திரம் செய்பவர் அல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதிரி ஒரு காரியத்தைச் செய்ய முயன்றபோது அந்தப் பகுதியில் உள்ள அண்ணங்காராச் சாரியார் போன்ற ஆஸ்திகப் பிரமுகர்கள் மறுப்பு அறிக்கை விடுத்திருக்கிறார்கள்.