உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

இடத்தில் வைத்து கடவுள் எங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எங்களைப் பண்படுத்திக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக் கிறோம். இதிலே, நீங்கள் 'நாத்திகம்' என்ற பத்திரிகையை நடத்திக்கொண்டு எங்களை பார்த்து 'நாத்திகர்கள்' என்று சொல்லுவதுதான் ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.

இந்தக் குறிப்பிட்ட வினாயகர் சிலையைப் பொறுத்து இன்றைக்கு வந்திருக்கிற அறிக்கையைப் பற்றித் திரு. வினாயகம் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருப்பதைப் போலீஸ் கமிஷனருக்கும் எழுதி அனுப்பி யிருப்பதாகக் கூறினார்கள். இவ்வளவு நாட்களாக இவர் இதைச் சொல்லாமல் சட்டசபை ஆரம்பிக்கும் நேரமாகப் பார்த்துச் சொல்லி இருக்கிறார். குமுதம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போதுகூட இந்தவிதமாக எந்தக் கருத்தையும் அறிவிக்கவில்லை இவர். இப்போது என்ன சொல்லியிருக்கிறார்? முதலில் கொடுத்த வாக்குமூலத்தின்போது தன்னைப்பற்றி என்ன கூறியிருக்கிறார்? செல்வராஜ் என்ற இந்தப் போலீஸ்காரர் முன்பு இதைப்போலவே பிள்ளையார் வியாபாரம் செய்திருக்கிறார். முதல் வாக்கு மூலத்திலேயே கொடுத்திருக்கிறார். தியாகராயநகரில் உள்ள ஒரு நடிகரின் வீட்டுக்கு யாரோ ஒருவர் பிள்ளையாரை வைக்க வந்தார். பிள்ளையாரைப் பொதுவாகத் திருடித்தான் வைப்பது வழக்கம் என்ற காரணத்தால் அந்த நடிகர் மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் ஃபோன் செய்தார். பிள்ளையாரைத் திருடிக் கொண்டு வந்தவர், ஃபோன் செய்ததை அறிந்து போலீசார் வந்தவுடன் பிள்ளையாரை அப்படியே ஓரிடத்தில் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். அந்தப் பிள்ளையாரை செல்வராஜ் எடுத்துச் சென்று தன்னுடைய வீட்டில் மரத்தடியில் வைத்துக் கொஞ்ச நாள் பூஜை செய்து வந்தார். இன்னொரு பெரியவர் அவரிடம், எச்சம் விழக்கூடிய இடத்தில் பிள்ளையாரை வைத்திருக்கிறாரே, ஏதாவது கோயில் கட்டி வைக்கக்கூடாதா என்று கேட்டார். உடனே, அந்தப் பிள்ளையாரை அவர் தியாகராயநகர் காய்கறி வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டார். செல்வராஜ் கொடுத்த அந்தப் பிள்ளை யாருக்குத் தியாகராயநகரில் கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இந்தச் செய்தி