74
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
யிருக்கிறார்? பிள்ளையார் விஷயமாக மற்றப் போலீஸ் ஆபீஸர்கள் யாரையும் பிக்சருக்குக் கொண்டுவர வேண்டாம் என்றும், எல்லாம் உன் ஒருவனோடே இருக்கட்டும். நீ ஒன்றும் பயப்படாதே என்றும் விஸ்வனாத ஐயர் இவருக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அந்த ஹெட் கான்ஸ்டபிள் அப்படி ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்க வற்புறுத்தப்பட்டார் என்று சொல்கிறார். இதில் தண்டிக்கப்பட வேண்டியவர் அந்த விஸ்வனாத ஐயரா அல்லது அந்த ஹெட் கான்ஸ்டபிளா என்பதில் வேண்டுமானால் கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆகவே, அதுகுறித்து அதுபற்றிய விசாரணைக்குப் பிறகு முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அங்கே திரும்பவும் பிள்ளையார் வைக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பதைப் பற்றிய பிரச்சினை பற்றி இப்போது நாம் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி வைக்க வேண்டிய தேவை இல்லை.
பத்திரிகைகளில் படம் எல்லாம் போட்டார்கள். சுவரொட்டிகள் எல்லாம் போட்டார்கள். பிள்ளையாரை ஜெயிலில் வைத்திருப்பதாகவும் நாவலரை ஒரு போலீஸ்காரர் போலவும், என்னை ஒரு போலீஸ்காரர் போலவும் படம்போட்டு ஊர் எல்லாம் ஒட்டி, தி.மு.க.-வின் சாதனை 3 அல்லது 4 என்று போட்டார்கள். ஆனால் அந்த ஹெட் கான்ஸ்டபிள் அந்தக் குட்டை உடைத்திருக்கிறார். அப் பிள்ளையார் ஜெயிலில் இல்லை. இதுவரை என் வீட்டிலேதான் இருந்தார் என்று அவர் குட்டை உடைத்திருக்கும் வகையில் அவர் குட்டை உடைத்தது மட்டுமல்ல - சுவரொட்டிகள் போட்டவர்களுக்கும் நல்ல சூடு கொடுத்திருக்கிறார் என்பதில் அந்த ஹெட் கான்ஸ்டபிள் மீது எனக்கு மெத்த சந்தோஷம், நன்றி! பிள்ளையார் ஜெயிலில் இருக்கிறார், ஜெயிலில் இருக்கிறார் என்று பிரசாரம் செய்தவர் களுக்கு சூடு கொடுக்கும் விதத்தில், அந்தப் பிள்ளையார் தன் வீட்டிலேயே இருந்ததாக அந்த ஹெட் கான்ஸ்டபிள் இன்றைய செய்திகளில் ஒத்துக்கொண்டிருக்கிறார்.
-
இப்போது அவருக்குள்ள கவலை, அவர்கள் ஸஸ்பென்ஷனில் வைக்கப்பட்டிருக்கிறார். அது நீக்கப்பட வேண்டும் என்பதுதான். முதலில் 'உங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்கிறேன்' என்று