உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

யெல்லாம் இல்லை என்று சொன்னார்கள். இப்படி இது இங்கே மட்டும் நடைபெறுவதில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தி லேயும் எதிர்க்கட்சிகளுக்கிடையே இப்படிப்பட்ட ஒரு போட்டி யிருக்கிறது. அந்தக் கட்சி சோடையான கட்சி, இந்தக் கட்சி வீரம் நிறைந்த கட்சி என்று நான் குறிப்பிடவில்லை. அப்படிப்பட்ட பிரச்சாரம் அங்கே நடக்கிறது. நேற்று நான் குறிப்பிட்டதைப் போன்று அந்தப் போட்டி அரசாங்கத்தோடு போராடுவதில் யார் தீவிரமாக இருக்கிறார்கள் என்ற நிலைமையை உருவாக்கி விடுமோ என்று நான் ஐயறுகின்றேன். முதலிலே 19ஆம் தேதி போராட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது. 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரையில் 117 பேர்கள் கைது செய்யப் பட்டார்கள். அவர்கள் 27ஆம் தேதி வரையில் சிறையில் வைக்கப்பட்டார்களா என்றால் இல்லை. மறியல் செய்யும் காரணத்தினால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும், அலுவ லகத்திற்கு வருகின்றவர்களுக்கு இடைஞ்சலாகவும் இருக்கும் என்ற முறையில் உடனடியாக அவர்கள் அகற்றப்பட்டுக் கைது செய்யப்பட்டு, மாலையிலேயோ அல்லது மறுநாள் காலையி லேயோ விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதைப் போலவே திரு.பொன்னப்ப நாடார் போன்ற பழைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்களும்...

திரு.கே.ஏ.மதியழகன்: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றுதான் கட்சியிருக்கிறது. திரும்பத்திரும்ப அ.தி.மு.க. என்று சொல்கிறார்களே.

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: ஹாண்டே அவர் களுக்கு ஏ.டி.எம்.கே. என்றுதான் சொன்னார்கள்.

திரு. கே.ஏ. மதியழகன்:

மதியழகன்: நானும் திருவாரூர் முன்னேற்றக் கழகம் என்று சொல்லுவேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று இருக்கிறது. அ.தி.மு.க. என்று சொல்வது அதுவும் பெரிய இடத்தில் உள்ள முதலமைச்சர் கூறுவது முறையல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள