உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

19

இவைகள் அனைத்தும் ஹேமாவதித் திட்டம் ஏற்கப்படுமுன்னர் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் மத்திய அரசை கோரியது.

இந்த அடிப்படையில்தான் இரு நாட்கள் (19,20-8-1968) டெல்லியில் மத்திய நீர்-மின்சாரக் குழுத்தலைவர் அவர்களுடன் இரு மாநில செயலாளர்கள், பொறியியல் வல்லுநர்கள், ஆகியோர் கலந்து அதிகாரிகள் நிலையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இந்தப் பேச்சு வார்த்தைகளின் போக்கினை நான் தொடர்ந்து அப்போதைக்கப்போதே அறிந்து கூர்ந்து கவனித்து வந்தேன். அதனைத் தொடர்ந்து மத்திய பாசன மின்சார அமைச்சர் திரு.கே.எல்.ராவ் அவர்களும், மைசூர் மாநில முதலமைச்சர் திரு. வீரேந்திர பட்டீல் அவர்களும், நானும் இது குறித்து, சந்தித்துப் பேசினோம். இவற்றின் பயனாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு உரித்தான நீர்ப்போக்கு அளவு சிறிதேனும் குறைவின்றித் தொடர்ந்து அனுப்புவதற்கு மைசூர் உறுதி அளித்துள்ளது. அந்த உறுதி நிறைவேற்றப்படும் வகையில், விதிமுறைகள் செயல்முறை, நிர்வாக நடைமுறை ஏற்பாடுகள் ஆகியவை பற்றி விரிவான விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது.

1924-வது ஆண்டு ஒப்பந்தத்திற்கு ஏற்பவும், உட்பட்டும். நீர் அளவைகள் ஏற்படுத்துதல், அவற்றினை ஆய்ந்து கணக்கிடுதல், புதுத் தேக்கத்தில் எப்பொழுது, எவ்வாறு, இந்த உறுதி நிறைவேறும் வகையில், நீரைத் தேக்குவது என்பதற்கான விதிமுறைகள், அவ்விதிகள் செயல்முறையில் நிறைவேற்றப்படவும், எனக் கண்காணிப்பதற்கும்

நிறைவேற்றப்படுகின்றனவா

தேவையான ஏற்பாடுகள், பதிவு முறைகள், இவை குறித்து வரைவுகள் தயாரிக்கப்பட்டு, தொடர்ந்து இரு அரசுகளும் பரிசீலித்து முடிவு மேற்கொள்ளப்பெறும். டெல்லியில் நடந்துள்ள பேச்சு வார்த்தைகள் குறித்து தமிழக முதலமைச்சர் அவர்களுடன் கலந்து அரசின் சார்பில் மேற்கொண்டு (மத்திய அரசுக்கு) கருத்து அறிவிக்கப்படும் என்று டெல்லி பேச்சுவார்த்தையின் இறுதியில் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன்.