உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

அனைவரும்

கருதுகிறோம்.

25

ல்லை.

என்றும் நாம் ஆனால், மைசூருக்கும் தமிழக அரசுக்கும் இடையில் 1892, 1924-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறி, மைசூர் அரசு புதிய நீர்த் தேக்கங்களை கட்ட முற்பட்டுள்ளது. இது சரியும் அல்ல, முறையும் அல்ல. அவர்கள் மறுபரிசீலனை செய்து உடன்பாட்டில் கண்டுள்ள ஷரத்துக்களின்படி புதிய நீர்த்தேக்கங்களைக் காட்டலாம். அதில் நமக்கு ஆட்சேபணை இல்லை உடன்பாட்டிற்குப் புறம்பாகச் செல்லவேண்டாம் என்கிறோம், மைசூர் அரசு உடன்பாட்டை மதித்து நடக்குமானால் இரு அரசுகளுக்குமிடையில் இன்று நிலவும் நல்லுறவு மேலும் வலுப்படும். அண்மையில் நமது பொதுப்பணி அமைச்சர் அவர்கள், டெல்லியில் திரு. கே.எல்.ராவ் அவர்களையும் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களையும் சந்தித்து நமது அரசின் சார்பில் உள்ள நியாய வாதங்களை வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள். அவர்களும் உடனடியாக கவனம் செலுத்துவதாக உறுதி கூறியிருக்கின்றனர். இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்ட 'காலத்தாழ்வை' மேலும் தொடர்ந்து கடைப்பிடிக்காமல் மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மைசூர் அரசு, தொடர்ந்து கட்டிக்கொண்டுவரும் 'ஹேமாவதி' போன்ற நீர்த் தேக்கங்களை தடுத்து நிறுத்த வேண்டுமென்று இந்த மன்றத்தின் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். மன்றத்தில் உள்ள எல்லாக் கட்சிகளின் சார்பிலும் எடுத்துரைக்கப் பட்ட கருத்துக்களின் அடிப்படையை உணர்ந்து, மைசூர் மாநில அரசு தமிழகத்தின் நியாயமான உரிமைக் குரலுக்கு மதிப்பளிக்க முன்வர வேண்டுமென்று மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டு செயலாற்றப்படும் நேரத்தில் - அந்தக் கொள்கைக்கு வலுவளிக்கும் வகையில் இந்திய அரசு, உடனடியாகச் செயல்பட்டு, இந்த இரு மாநிலங்களுக்கிடையில் எழுந்துள்ள சிக்கலைத் தீர்த்திட முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கூறிக்கொண்டு, இந்த அளவோடு விடை பெறுகிறேன்,