கலைஞரின் சட்டமன்ற உரைகள்
35
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த அரசுக்கு அனைத்துக் அனைத்துக் கட்சிகளினுடைய தலைவர்கள் அனைவரும் தங்கள் அன்பான ஒத்துழைப்பு தமிழ்நாட்டு மக்களின் நலனை உத்தேசித்துத் தந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இதய பூர்வமான பாராட்டுதலை இந்த அரசின் சார்பாகத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
எ
இந்த நிலைமையில் நாம் கடைசியாக அனைத்துக் கட்சி களுடைய தலைவர்களுடைய கூட்டத்தை கோட்டையில் கூட்டினோம். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், நாம் மத்திய அரசு இதிலே காட்டுகிற நிதானப் போக்கை, ஏறத்தாழ 18 மாத காலமாகக் காட்டுகிற நிதானப் போக்கை, கண்டிக்கிற வகையிலே தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கட்சித் தலைவர் களுடைய கூட்டத்தை நடத்துவது என்பது ஒரு தீர்மானம். தமிழகத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினார்கள் டில்லிப் பட்டணத்தில் இந்தியாவினுடைய தலைமை அமைச்சர் திருமதி இந்திரா காந்தி அவர்களைச் சந்தித்து நம்முடைய தமிழ்நாட்டின் எதிர்காலத்தினுடைய நிலைகளையெல்லாம் விவரமாக விளக்கியும், மைசூர் மத்திய அரசினுடைய ஒப்புதலைப் பெறாமல் தமிழ் நாட்டிற்கு விரோதமாக அணைகளைக் கட்டுவதை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு முறையீடு ஒன்றைத் தரவேண்டுமென்பது இரண்டாவது தீர்மானம். மூன்றாவது, இன்றைக்கு மாநில சட்டப் பேரவையிலும், மேலவையிலும் இந்த அணைகள் கட்டுகிற விஷயத்திற்காகத் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டுமென்பதாகும். இதிலே இரண்டினை நாம் செய்து முடித்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட கண்டனக் கூட்டங்கள் மிக எழுச்சி நிறைந்ததாக, உணர்ச்சி மிக்கதாக, உருக்கம் கலந்ததாக நடைபெற்று முடிந்து இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தலைமை அமைச்சரை டில்லியில் அவருடைய இல்லத்தில் கண்டு நம்முடைய நியாயமான உரிமைகளை வற்புறுத்தியிருக்கிறார்கள். இப்போது மூன்றாவது கட்டமாகத்தான் இந்தத் தீர்மானத்தை நாம் ஏற்கெனவே முடிவு செய்தவாறு இந்த மாமன்றத்திலே நிறைவேற்றுவதற்கு இங்கே நாம் கூடியிருக்கிறோம். ஆகவே, இதிலே எந்தவிதமான கட்சி மாச்சரியங்களுக்கும் நிச்சயமாக இடம் கிடையாது. எந்தக்