36
காவிரிப் பிரச்சினை மீது
கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தமிழர் களாகக்கூட அல்ல, தமிழ் நாட்டுக்காரர்கள் என்ற நிலைமையில், தமிழ் நாட்டின் வருங்காலம் பாதிக்கப்படக்கூடாது என்ற அளவில் அனைவரும் பங்கு பெற்றிருப்பதை உள்ளபடியே பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த வகையில் பங்கு பெற்று ஒத்துழைத்து வருகிற அனைத்துக் கட்சித் தலைவர்கள் மேலும் இந்த அரசுக்கு ஒத்துழைப்புத் தருவார்கள் என்கின்ற நிறைந்த நம்பிக்கையோடு இந்தத் தீர்மானத்தை இந்தப் பேரவையின் முன் நான் முன்மொழிந்து இந்த அளவிலே அமைகிறேன்.
திருமதி. த. ந. அனந்தநாயகி : காவிரித் தண்ணீர் முழுவதையும் நாம்தான் பயன்படுத்துகிறோம். இவ்வளவு நல்ல முறையில் பயன்படுத்தி வந்த காவிரித் தண்ணீரை அக்கறைக் குறைவினாலோ, திறமையாகச் சமாளிக்கத் தெரியாத காரணத் தாலோ விட்டுக் கொடுத்தோம், ஏமாந்தோம் என்று பேசுவதற்கு தமிழகம் ஆளாகக்கூடாது.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: ஏதோ நாங்கள் அவசரப்பட்டு தீவிரமாக எதையும் செய்யவில்லை என்று அம்மையார் அவர்கள் குற்றம் சாட்டினார்கள். இதைப்பற்றி ஒரு விவாதம் 1969 செப்டம்பர் 13-ம் தேதி இந்த மாமன்றத்தில் நடைபெற்றபோது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த மாண்புமிகு திரு. பி. ஜி. கருத்திருமன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள்
66
-
உணர்ச்சி வசப்பட்டுப் பேசாமல், உணர்ச்சியைக் காட்டிக் குழப்பாமல், சில பேர்கள் சில வேளைகளில் பேசுவது போல் 'அதெல்லாம் தவறு என்று நினைக்கிறேன், இதைச் செய்தால் நாங்கள் அதைச் செய்வோம்' என்றெல்லாம் பேசாமல் உட்காந்து சுமுகமாகப் பேசி முடிக்கவேண்டும். இது விஷயத்தில் முதலமைச்சர் அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தமிழகத்திலுள்ள எல்லா மக்களும், எந்த விதமான அபிப்பிராய பேதமும் இல்லாமல், நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்ற நிலையிலேயே கேட்டுக்கொள்வோம்” என்று திரு. கருத்திருமன் அவர்களே சொல்லியிருக்கிறார்கள். ரொம்ப நிதானமாகப் போக வேண்டும்; உணர்ச்சி வசப்படக்கூடாது, அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்றெல்லாம் பேசக்கூடாது என்று அப்போதே திரு. கருத்திருமன் பேசியிருக்கிறார். நாங்கள் எல்லா அரசியல் கட்சிகளின் முடிவை அறிந்துதான் செயலாற்றி