உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

37

வருகிறோம். இந்த அரசு செயலாற்றி வருகிறது. எதிர்க் கட்சியில் இருந்து அதன் தலைவர் கருத்திருமன் பேச்சுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் எல்லாத் தலைவர்களும் சொன்ன அபிப்பிராயத்திற்கு மரியாதை கொடுக்கும் வகையில் எல்லோரும் சேர்ந்து எந்த முடிவை எடுத்தோமோ அந்த முடிவின்படிதான் செயல்பட்டு வருகிறோம்.

திருமதி த. ந. அனந்தநாயகி : திரு. கருத்திருமன் அவர்கள் இந்தியாவின் ஒற்றுமைக்குக் குந்தகம் விளையக் கூடாது என்று எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருந்தார்களோ அதை நானும் கொண்டிருக்கிறேன். நான் சொல்லுவது என்னவென்றால் பேச்சுவார்த்தை நடத்துவது என்றால் எத்தனை ஆண்டுகளுக்குப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதுதான். பேச்சுவார்த்தை சரியான முறையில் செல்லவில்லை என்றால் அதைவிட்டுத் திரும்பி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? மைசூர் முதலமைச்சர் அணையைக் கட்ட ஆரம்பித்துவிட்ட பிறகும் நாம் பேச்சு வார்த்தையிலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தால் எப்படி?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : உறுப்பினர் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். தேர்தலுக்கு முன்னாலேயே டிரிப்யூனலுக்கு விடுவதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து உத்தரவு வாங்கி இருக்க வேண்டுமென்ற சொல்லுகிறார்கள். அன்றைக்கு நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அவர்களுக்குத் தேவை என்ற நிலையில் வற்புறுத்தியிருந்தால் தற்போது நடந்த பொதுத் தேர்தலை ஆறு மாதத்திற்கு முன்னால் ராஜினாமாச் செய்துவிட்டு நடத்தி இருக்க முடியும்.

திருமதி த. ந. அனந்தநாயகி : இனிமேலும் இந்தப் பிரச்சினையிலே ராஜினாமாச் செய்துவிட்டுப் பொதுத் தேர்தலை நடத்தத் தயாராக இருக்கிறோம், தமிழகம் வாழ, தமிழ் நாட்டு மக்கள் வாழ ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலுக்கு நிற்கத் தயாராக இருக்கிறோம் என்ற அந்த நிலையை.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் சொல்லுவதைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள். தமிழ் நாட்டில் ராஜினாமாச் செய்வோம் என்று சொல்லுகிறார்கள். ராஜினாமாச் செய்துவிட்டு மறுபடியும் வந்தால் ஒரு

கட்சியின்