38
காவிரிப் பிரச்சினை மீது
எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்படலாம் என்ற கருத்தில் பேசுகிறார்கள் என்று கருதுகிறேன்.
அரசியல் பற்றிக் குழப்பாமல் பேச வேண்டிய பிரச்சினை இது. அன்றைய தினம் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே தலைவர்கள் மட்டிலும் பேசினால் போதும் என்று முடிவு செய்யப்பட்டது. இன்றைய தினம் இதை முழுக்க முழுக்க அரசியலுக்குக் கொண்டு போவதாக இருந்தால் அதற்கும் நான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மாநில அரசு தாமதமாகச் செயல்படுகிறது, தீவிரமாகச் செயல்பட வேண்டுமென்று கூறினாலும் ஏற்றுக்கொள்கிறேன். அப்படிக் கூறுவதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு மேலும் மத்திய அரசோடு போராடப் பயன்படும் என்று எடுத்துக் கொள்கிறேன். ஆனால் உண்மையில் அப்படி நம்பிக்கொண்டு பேசாதீர்கள்.
இந்த அரசு 1968-ம் ஆண்டிலிருந்து இதுவரை செய்திருக்கிற முயற்சிகளையெல்லாம் இந்த மாமன்றத்தில் அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் பாராட்டியிருக்கிறார்கள். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் து களெல்லாம் பாராட்டப்பட்டு, மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ராஜாராம் அவர்களும், பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் பொன்னப்ப நாடார் அவர்களும் அண்மையில் நடைபெற்ற கண்டன கூட்டங்களில் கூட முதலமைச்சர் அவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த மன்றத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளையெல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களேயல்லாமல் யாரும் இது தவறான முயற்சிகள், அரசு தீவிரமாக நடைபெறவில்லை, முயற்சி எடுக்கவில்லை என்று சொல்லவேயில்லை. தமிழ்நாடு அரசாங்கம் ராஜினாமா செய்துவிடுவது என்பது பெரிய காரியமல்ல. மறு தேர்தலை சந்திக்க முடியுமா என்ற பயத்தையும் அச்சத்தையும் ஆட்படுத்திக் கொண்டு அல்ல இந்தப் பிரச்சினையைப்பற்றிப் பேசுவது. ராஜினாமா யார் யார் செய்வது எப்படிச் செய்வது என்பதையெல்லாம் கடைசி கட்டத்தில் யோசிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள். பதவியை விட்டு விலகுவது என்பதற்காக நிச்சயமாக மனதார மனதார கண்ணீர் வி கண்ணீர் விடமாட்டோம் என்பதை அம்மையார் உணர வேண்டும். நான் சொல்ல வந்தது, அப்போதிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்புத் தர முடியாது என்று கூறிவிட்டிருப்பார்களானால் இப்போது நடந்த