கலைஞரின் சட்டமன்ற உரைகள்
53
submitted a report and it is under consideration. If the views of your Government are made available to us, they will also be taken into account என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களே, These are important issues என்று குறிப்பிட்டிருப்பது, ராஜமன்னார் கமிட்டி அறிக்கையைப் பற்றியா, அட்மினி ஸ்ட்ரேட்டீவ் ரிபார்ம்ஸ் கமிட்டி அறிக்கை என்று பத்திரிகையில் வந்திருக்கிறதே. அதைப்பற்றியா? ஒரு வேளை நான் குறைந்த ஆங்கில அறிவு பெற்றவன் என்ற காரணத்தால் அந்த வகையில் கூறுகிறார்களோ, என்னவோ? கடிதத்தை எழுதிவிட்டு, டெல்லி வட்டாரத்து அதிகாரிகள் இப்படிச் சொல்கிறார்கள் என்றால், நம்முடைய பத்திரிகைகளுக்கெல்லாம் ஒரே குஷி. இந்திரா காந்தி அவர்களின் கடிதத்தைக்கூட அவர்கள் போடுவதில்லை. டாக்டர் ஹாண்டே அவர்கள் தர்மவீராவைப்பற்றிச் சொன்னார்களே, அது போல இந்திரா காந்தி அம்மையார் "முதலமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டுகிறோம்" என்று சொல்லிவிட்டு, பின்னர் அதிகாரிகள், அப்படியெல்லாம் இந்திரா காந்தியம்மையார் முதலமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டப்போவதில்லையாம் என்று சொல்வது நம்முடைய பத்திரிகைகளுக்கெல்லாம் ஒரே குஷி. “முதலமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டப்போவ தில்லையாம், கருணாநிதிக்கு ஆப்பு” என்றெல்லாம் பத்திரிகைகள் போடக்கூடும். ஒரு பத்திரிகையை மட்டும் சொல்லவில்லை, பல பத்திரிகைகள் இதை ஒரு பெரிய விழாவாகவே கொண்டாடி யிருக்கிறார்கள்.
DR. H. V. HANDE : The Prime Minister might have said that she wanted to consult the Chief Ministers. But that does not mean that she wants to have a Chief Ministers' conference. Probably that is the misunderstanding.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, முதலமைச்சர்களைக் கலந்து பேசுவதென்றால், தனித்தனியாகப் பேசுவது என்று அர்த்தம் அல்ல. அவர்களே மறுத்தால்கூட நான் கவலைப்படப் போவதில்லை. இந்திரா காந்தியம்மையாரே மறுத்திருந்தாலும் என்னுடைய வாதம் இன்னும் வலுப்பெறுமே அல்லாமல், குறைவுபடாது. மாநிலங்களுக்குக் கடிதம் எழுதுகின்ற உரிமைகூட கொடுக்கவில்லை என்று அதைப் பயன்படுத்திக்கொள்வேனே தவிர, வருத்தப்படப் போவதில்லை. முன்னாள் பாராளுமன்றத்தில் பெட்ரோலிய
நேற்று