52
காவிரிப் பிரச்சினை மீது
சந்தித்துப் பேசினார்களே, அங்கே என்ன பேசப்பட்டது, அதை வேண்டுமென்று முதல் அமைச்சர் அவர்கள் விளக்க கோருகிறேன் என்பதாக ஓர் உறுப்பினர் சொன்னார். அதை நான் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விளக்கி இருக்கிறேன். அதைப்பற்றி வேறு விவரங்களை நான் இங்கே சொல்ல விரும்பவில்லை.
து
திரு. கே. எல். ஆர். அவர்கள் அப்போது சொன்ன கருத்துக்களையாவது மறுபடியும் இதுவரை எழுத்து மூலம் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார்களா என்றால் இல்லை. அப்படி எதுவும் செய்யாது காலம் தாழ்த்தி வருகிறார்கள். அதற்குக் காரணம் நமக்குப் புரியவில்லை.
ஆனால் இன்றையதினம் வேறு ஒரு செய்தி பத்திரிகையில் வந்திருக்கிறது. மாநில அரசு தவறு செய்தது, முதல் அமைச்சர் தவறு செய்துவிட்டார். இந்திரா காந்தி அம்மையார் முதல் அமைச்சர்களை எல்லாம் கூட்டி மாநில சுயாட்சி பற்றி விவாதிப்பதாகச் சொல்லவில்லை அவர்கள் கடிதம் எழுதியது ஏ. ஆர். ஸி. கமிஷனைப் பற்றித்தான் என்பதாக ஒரு அதிகாரி சொல்லியிருக்கிறார். நண்பர் ஹாண்டே அவர்கள்கூடச் சொன்னார்கள். உண்மையைச் சொல்லிவிட்டு இன்றைக்கு அரசியல்வாதிகள் அதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள அதிகாரிகளைவிட்டு மறுப்பு விடச் சொல்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
திருமதி. இந்திரா காந்தி அம்மையார் எழுதிய கடிதத்தை வைத்துப் பேசுகின்றேன். அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது? சந்தேகம் இருந்தால் யார் வேண்டுமானாலும் இந்தக் கடிதத்தை வாங்கிப் பார்க்கலாம். These are important issues and we intend to consult all Chief Ministers என்று சொல்லும்போது எவை எல்லாம் முக்கியமான பிரச்சினைகள்? அவர்கள் கடிதம் எதற்காக எழுதினார்கள்? I have received your letter of 15th June with which you have sent me a copy of the report of Centre-State Relations, Enquiry Committee என்பதாக அவர்களே நாம் அனுப்பி வைத்த ராஜமன்னார் குழு அறிக்கைக்குப் பதில் எழுதினார்கள். அதில், Your Government will probably examine the recommendations of this Report என்று குறிப்பிட்டுவிட்டு, As you know the Administrative Reforms Commission also went into this question என்று சொல்லிவிட்டு It has already