உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

51

ஆனாலும் இது சாதாரணப் பிரச்சினை அல்ல என்று திரு. இராம அரங்கண்ணல் குறிப்பிட்டதுபோல, நமது திரு. பெருமாள் அவர்கள் குறிப்பிட்டதுபோல இயற்கையிலே இது பயங்கரமான உருவம் எடுத்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. மறைக்க முடியாது. நமது அம்மையார் அவர்கள் எடுத்துக்காட்டியதுபோல இன்றைக்கு மத்திய அரசு மாநில அரசின் சில கொள்கைகளை கொஞ்சம் கசப்போடுதான் அணுகுகிறார்கள் என்பதை நான் மறைக்க விரும்பவில்லை. அப்படிச் சில நடைமுறைகள் இன்றைக்கு இருந்துகொண்டிருக் கின்றன. ஆனால் அத்தனை பிரச்சினைகளையும் தேர்தல், தேர்தல் கால ஒப்பந்தங்கள் ஆகியவற்றோடு ஒன்றோடொன்று இணைத்துப் பார்ப்பது சரியான வாதமாகாது.

இவை எல்லாம் ஒரு அரசுக்கும் இன்னொரு அரசுக்கும் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடு என்று பார்க்கவேண்டுமே தவிர ஒரு கட்சிக்கும், இன்னொரு கட்சிக்கும் இருக்கிற வேறு பாடாகப் பார்க்கக்கூடாது.

-

ஹேமாவதி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர் திரு. வீரேந்திர பட்டீல் அவர் பழைய காங்கிரஸைச் சேர்ந்தவர் ஆகவே அதற்காக இங்கே உள்ள பழைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களைக் குறை சொல்ல வேண்டுமென்று குறை சொன்னதில்லை. அது தமிழக அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே ஏற்பட்டிருக்கிற தகராறு என்று அளவில்தான் பார்த்தோம். உண்மையில் இது மைசூர் அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தகராறே தவிர மைசூர் மாநில மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஏற்பட்டுள்ள தகராறு அல்ல. இந்த இரு அரசுகளுக்கும் இடையே எழுந்துள்ள தகராறில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக நியாயம் வழங்க வேண்டுமென்று நாம் கோருகிறோம். இந்தத் தகராறில் தலையிட மத்திய அரசு மறுக்கிறது. மாநில அரசின் கருத்துக்களை அலட்சியப்படுத்துகின்றது. பிறகு பார்க்கலாம் பிறகு பார்க்கலாம் என்பதாக பிரச்சினைகளை ஒத்திவைக்கின்றது. நமது உணர்ச்சிகளைச் சரியான முறையில் புரிந்துகொள்ள முடியாத நிலைமை அங்கே இருக்கிறது.

அமைச்சர் மாதவன் அவர்களும், சாதிக் பாட்சா அவர்களும் டெல்லிக்குச் சென்று திரு. கே. எல். ராவ் அவர்களைச்