உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

101

உரை : 10

நாள் : 24.02.1975

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மேலவைத் தலைவரவர்களே, காவிரிப் பிரச்சினை குறித்து காலையிலே பேரவையிலே கூட ஒத்தி வைப்புத்தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது பற்றிய விளக்கங்களைப் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களும் நானும் அங்கே கொடுத்திருக்கின்றோம். மேலவையில் நம்முடைய மாண்புமிகு அங்கத்தினர்கள் கொண்டு வந்திருக்கின்ற ஒத்திவைப்புத்தீர்மானத்தின் அடிப்படையில் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்துமே இந்த அரசுக்கு உடன்பாடான கருத்துக்களே அல்லாமல் வேறு அல்ல. இந்தப் பிரச்சினை 1968-ஆம் ஆண்டிலிருந்தே பேசப்பட்டு வருகின்ற பிரச்சினையாகும். அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது பொதுப்பணித்துறைப் பொறுப்பினை நான் கொண்டிருந்த காலத்தில், டெல்லியிலே இந்தப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பெற்றன. அதிலிருந்து இதுவரை பல்வேறு கட்டங்களில் இந்தப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று ஒவ்வொரு கட்டத்திலும் இது நல்லமுறையிலே முடிவுறும் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏதோ ஒரு காரணத்தால் பேச்சுவார்த்தை தோல்வியிலே முடிந்தது என்கிற செய்தியை நாடு பெறவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாயிற்று. குறிப்பாக இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசினுடைய நிலை மிகத்தெளிவானது. பல ஆண்டுக்காலமாக நாம் அனுபவித்து வருகின்ற காவிரித் தண்ணீருடைய பயனை இழந்துவிடுவதா என்பதுதான் மிக மிக முக்கியமான கேள்வியாக இருக்கின்றது. இந்தக்கேள்வி எழுகின்ற அதே சமயத்தில் கர்நாடக மக்கள் காவிரித்தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்ளவே கூடாது என்பது நம்முடைய வாதம் அல்ல. அந்த மாநிலத்து மக்களும் காவிரித்தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் புதிதாக ஆயக்கட்டுக்களை உருவாக்கி அதைப்பயன்படுத்துகிற