உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

105

பெறமுடியும். இதை நான் நிபந்தனையாக விதிக்கவில்லை. எங்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்காகவாவது மத்திய அரசு இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்பதை நான் பேரவை யிலேயே குறிப்பிட்டேன், மேலவையிலும் குறிப்பிடுகிறேன். இது மத்திய அரசின் காதுக்கு எட்டும் என்ற வகையிலும் இந்தச் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்கள், இங்கு மாத்திரமல்லாமல் பேரவையிலும் எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்கள் அரசியல் கட்சி சார்பற்ற முறையிலே தமிழ்நாட்டு மக்கள் அத்தனைபேருடைய ஏகோபித்த கருத்துக்களை என்கின்ற அளவில் மத்திய அரசு இதை உடனடியாகக் கவனிக்க வேண்டுமென்று எடுத்துக் கூறுவதோடு நடுவர் தீர்ப்புக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்ல வேண்டுமென்கின்ற அந்த எண்ணத்திலேயிருந்து நான் சிறிதளவும் பின்வாங்கமாட்டேன் என்பதையும் இங்கே எடுத்துக்கூறி, இந்த அளவு பிறகு அவையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தை, தலைவர் அவர்களே, தங்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.