உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

காவிரிப் பிரச்சினை மீது

உரை : 11

-

நாள்: 19.01.1990

திரு. கே. ஏ. செங்கோட்டையன்: 1924ஆம் ஆண்டு ஒரு ரு ஒப்பந்தம் ஏற்படுத்தி, 1974வது ஆண்டு வரை, 50 ஆண்டுக்காலம் அந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, இன்றைக்கு ஆண்டு கொண்டிருக்கிற இந்த ஆட்சி, அன்றைய கால கட்டங்களிலே, 200 டி.எம்.சி. தண்ணீர்தான் விடுவேன் என்று கர்நாடக அரசு சொல்லிய நேரத்தில், அப்பொழுது வாதிட வேண்டிய இந்த ஆட்சி தமிழ்நாட்டிலே நெற்களஞ்சியம் என்று சொல்லப்படுகின்ற தஞ்சையிலே விளைநிலங்களில் எல்லாம், நெல் உற்பத்தியாகிய பகுதிகளுக்குத் தண்ணீர் பெறமுடியாமல், 1976-வது ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்களுடைய தலைமையிலே, தமிழக முதல் அமைச்சரும், அதே போல் கர்நாடக முதல் அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையிலே, 400 டி.எம்.சி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு மேட்டூரிலே காவிரியிலே விட வேண்டுமென்று ஒப்புதல் கேட்ட நேரத்தில் 100 டி.எம்.சி தான் நாங்கள் குறைக்கிறோம், அதுவும், தஞ்சை மாவட்டத்திலே இருக்கிற வாய்க்கால்களை நவீனமயமாக்கி சீரமைக்கிற நேரத்தில், 20 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு, ஆண்டுக்கு 5 டி.எம்.சி. குறைத்து, படிப்படியாகக் குறைத்து 20 ஆண்டுகளில் 100டி.எம்.சி தண்ணீரை குறைத்து 300 டி.எம்.சி. தண்ணீர் அளிக்க ஒப்புதல் அளித்த பிறகு, தமிழ்நாட்டிலேயிருந்து அன்றைக்குப் பேச்சுவார்த்தை நடத்தச் சென்று முதல் அமைச்சர் அவர்கள், அன்றைக்கு ஒப்பந்தம் செய்யாத காரணத்தினால் இன்றைக்கு எண்ணிப் பார்க்கிறோம். இன்றைக்கு இங்கிருந்து அமைச்சர் செல்கிறார். கர்நாடக மாநில முதலமைச்சரைச் சந்திக்கச் செல்கிற நேரத்தில், கர்நாடக முதல் அமைச்சர் இருக்கிறாரா இல்லையா என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல். இங்கேயிருந்து கர்நாடக மாநிலத்திற்குச் சென்று